Nayantara new year plan : புத்தாண்டு கொண்டாட கடல் தாண்டி போன காதல் ஜோடி!! விக்கி உடன் ஃபாரினுக்கு பறந்த நயன்

Ganesh A   | Asianet News
Published : Dec 30, 2021, 08:09 AM ISTUpdated : Dec 30, 2021, 09:34 AM IST

விமான நிலையத்தில் காதலன் விக்னேஷ் சிவனுடன், ஜோடியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

PREV
17
Nayantara new year plan : புத்தாண்டு கொண்டாட கடல் தாண்டி போன காதல் ஜோடி!! விக்கி உடன் ஃபாரினுக்கு பறந்த நயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல்வயப்பட்டார். இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது.

27

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். 2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

37

நடிகை நயன்தாரா, காதலனுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார்.

47

இந்நிலையில், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார் நயன்தாரா. அதன்படி அவர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு ஜோடியாக சென்றுள்ளனர்.

57

சென்னையில், நேற்று ராக்கி திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்த இருவரும், படம் முடிந்த கையோடு ஜோடியாக பிளைட் ஏறி துபாய்க்கு பறந்துவிட்டனர்.

67

விமான நிலையத்தில் காதலன் விக்னேஷ் சிவனுடன், ஜோடியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

77

புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு திரும்பியதும், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் பணிகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நயன் தாரா ஹீரோயினாக நடித்துள்ளது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories