நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆனதில் இருந்தே, அவர்களைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டாலும், அதற்கு விக்கி - நயன் ஜோடி எந்தவித செலவும் செய்யவில்லை என்றும், திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான செய்ததாக கூறப்பட்டது.
ஏனெனில் விக்கி - நயன் ஜோடியின் திருமணத்தின் வீடியோ உரிமையை அந்நிறுவனம் தான் பல கோடி ரூபாய் கொடுத்து பெற்றிருந்தது. அதனால் திருமணத்திற்கு வந்திருந்த நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வீடியோ அல்லது புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்களது திருமண புகைப்படங்கள் எதுவும் லீக்காகவில்லை.
தற்போது ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் விக்கி - நயன் ஜோடி பற்றி மேலும் ஒரு புதுத்தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர்கள் இருவரும் தற்போது சென்றிருக்கும் இரண்டாவது ஹனிமூனுக்கான முழு செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் ஏற்றுள்ளதாகவும், திருமணத்தைப் போல் இதற்கு அவர்கள் ஒரு ரூபாய் கூட செலவழிக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா விக்ரம்..! சியானின் ‘கோப்ரா’ சாதித்ததா?... சோதித்ததா? - விமர்சனம் இதோ
பொதுவாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றால் விக்னேஷ் சிவன் தான் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார். ஆனார் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள அவர்கள் அங்கு செல்லும் இடமெல்லாம் ஒரு புகைப்படக் கலைஞரையும் அழைத்துச் சென்று விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்கள்.