பாக்ஸிங் விளையாடு வீராங்கனையான ரித்திகா சிங், தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியவர். திடீர் என இவர் இயக்குனர் சுதா கொங்கரா கண்ணில் பட, இவரையே தான் இயக்கிய பாக்சிங் கதைக்களம் கொண்ட 'இறுதி சுற்று' படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார்.
26
இவர் ரியல் பாக்சிங் வீராங்கனை என்பதால், இந்த படத்தின் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வந்தது. இந்த திரைப்படம், நடிகர் மாதவனுக்கு மட்டும் இன்றி, ரித்திகா சிங்குக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதையடுத்து பாக்ஸிங்கை ஓரங்கட்டி வைத்துவிட்டு திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினர். அந்த வகையில் காக்க முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் ரித்திகா சிங் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை.
46
தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கிய ரித்திகா குரு, நீவேவாரு போன்ற படங்களில் நடித்தார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இதை தொடர்ந்து தற்போது இவரது கைவசம் நான்கு படங்கள் உள்ளது பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, மற்றும் கொலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
66
இந்நிலையில் இவர் பாக்ஸர் படத்திற்காக மீண்டும் ஹெவி ஒர்கவுட் செய்து... உடலை பிட்டாக மாற்ற முயற்சித்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.