பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பலாத்கார மிரட்டல்களை சந்தித்தேன்..பரபரப்பை கிளப்பிய பிரபலம்

First Published | Aug 30, 2022, 9:52 PM IST

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மக்கள் மோசமான நச்சு துஷ்பிரயோகங்களை தன் மீது வீசினார்கள் என கூறியுள்ளார் ஜாஸ்மின் பாசில். 

jasmin bhasin

பல மொழிகளிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர்கள் பலர். அந்த வகையில் ஹிந்தி பிக்பாஸின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜாஸ்மின் பாசில். அந்த நிகழ்ச்சியில் ஆளுமை மற்றும் அன்பான உறவு ஆகிய இரண்டிற்கும் பெயர் போனவராக  வலம் வந்தவர்.

jasmin bhasin

ஆனாலும் அதிக சர்ச்சைகள் இவரால் கிளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மனம் திறந்து உள்ளார். ஜாஸ்மின் பாசில். பிரபல செய்தி தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இவர், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மக்கள்  மோசமான நச்சு துஷ்பிரயோகங்களை தன் மீது வீசினார்கள். அந்த நிகழ்ச்சிகள்  தன்னை பிடிக்காத காரணத்தினால் தான் கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல்கள் வந்தது என  தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு...விஜய் சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன விஜய் மக்கள் இயக்கம்

Tap to resize

jasmin bhasin

இதனால் தான் பின்னடைவை சந்தித்தாகவும், தனது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிகிச்சை எடுத்து கொண்டதாகவும்  கூறியுள்ளார். மேலும் மருத்துவ உதவியை நாடிய பிறகுதான் அனைத்தையும் வென்றதாகவும் குறிப்பிட்டுள்ளதே.

அந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆதரவாக இருந்ததாகவும் ,  32 வயதான நடிகையும் ட்ரோல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் அதிக அன்பு பெறும் இடத்தில் இருப்பதால் யாராவது தன்னை ட்ரோல் செய்கிறார்களா என்பது கூட தனக்கு தெரியாது என வருந்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..தன் மகளை நினைத்து பூரித்து போன மகேஷ் பாபு...வைரல் வீடியோ இதோ

jasmin bhasin

மக்கள் என்னை நேசித்தாலும் அன்பை நான் திருப்பித் தருவேன் அவர்கள் என்னை வெறுத்தல் அது அவர்களின் விருப்பம் என்று கூறியுள்ள இவரிடம்  ட்ரோலிங் பாலினம் சார்ந்ததா என்று கேட்கப்பட்ட போது,  பாலினம் சார்ந்ததாக தான் நினைக்கவில்லை என்று பதில் அளித்தார். யாரும் தங்களைப் பற்றி இது போன்ற மோசமான விஷயங்களை படிக்க விரும்பவில்லை என்றும் ஆண்கள் சமமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...செப்டம்பர் 2022 OTT வெளியீடு எந்த எந்த படங்கள் தெரியுமா? பட்டியல் இதோ !

jasmin bhasin

 இதற்கிடையே ஜாஸ்மின் பாசில் இந்த ஆண்டு பல இசை வீடியோக்களில் இடம் பெற்றிருந்தார். தனது  பிக்பாஸ் தோழனுடனும் இணைந்து இசை வீடியோவிலும் தோன்றியிருந்தார். இப்போது நடிகை ஹனிமூன் என்ற பஞ்சாபி படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். 

Latest Videos

click me!