திரையில் தனது கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கொடுப்பதில் நடிகை நயன்தாரா எப்போதுமே தயங்குவதில்லை. இந்த தனித்த விஷயம்தான் சந்தேகத்திற்கு இடமின்றி திரைத்துறையில் அவரை இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் சமையலைச் சுற்றி வருவதால், செஃபாக நடிகை நயன்தாரா தனது 100% சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். மேலும், காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின் போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்தது.
படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பல விஷயங்களை படமாக்க வேண்டியிருந்ததால் நடிகை நயன்தாரா தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையின் போது கூட கேரவனுக்குள் செல்லாமல் செட்டிலேயே இருந்துள்ளார். நடிகை நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு 'அன்னபூரணி' படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D