பிங்க் கலர் உடையில் வெண்சிலை போல் மின்னும் தமன்னா.. லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்..

First Published | Nov 21, 2023, 6:36 PM IST

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இதுவரை 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2005-ம் ஆண்டு சந்த் சா ரோஷன் சேரா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பின்னர் அதே ஆண்டு ஸ்ரீ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

Tap to resize

எனினும் இந்த படங்களில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், கல்லூரி படத்தில் நடித்திருந்த தமன்னாவின் நடிப்புக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. அயன், பையா, சுறா, ஸ்கெட்ச், வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றி பெற்ற பாகுபலி 1, பாகுபலி 2 படங்களில் நடித்த தமன்னா தனது நடிப்பின் மூலம் ரசிக்ர்களை ஈர்த்தார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் தமன்னா.

தமிழில் கடைசியாக ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் உலகளவில் ட்ரெண்ட் ஆனார் . 

இதனிடையே வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கினார் தமன்னா. அவர் நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை  தொடர்ந்து ஜீ கர்தா, ஆக்ரி சச் போன்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். 

தற்போது பாந்த்ரா என்ற மலையாள படத்திலும், வேதா என்ற இந்தி படத்திலும் தமன்னா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தமன்னா பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்பங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தற்போது நடிகை தமன்னாவும் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் ஒன்றாக வேலை செய்யும் போது டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Latest Videos

click me!