கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து, ஜூன் மாதம் திருமண பந்தத்தில் இணைந்த நயன் - விக்கி இருவரும், தொடர்ந்து தங்களின் திரையுலக பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் நயன் திருமணத்திற்கு பின்னர், தான் நடிக்கும் படங்களில் தாலியை கழட்ட மாட்டேன் என கண்டீஷன் போட்டு நடித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இதற்காக நயன்தாரா தற்போது பாலிவுட் திரையுலகில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வரும் படத்தை தவிர மற்ற படங்களில் கமிட் ஆகாமல் உள்ளதாகவும்... விரைவில் இவர்கள் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், யாரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான தகவலை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நாயகிகளை போல்... வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரான நயன் - விக்கி நட்சத்திர ஜோடிக்கு, வாழ்த்துக்கள் ஒரு புறம் குவிந்து வந்தாலும், மறுபக்கம் சர்ச்சையிலும் சிக்கி உள்ளனர். இந்தியாவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க கடந்த ஜனவரி மாதமே அரசு தடை விதித்த நிலையில், நயன் - விக்கி ஜோடி எப்படி அந்த முறையில் குழந்தை பெற்றெடுத்தது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.