விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்ணவ் மீது அதிரடி வழக்கு பதிவு..! பூதாகாரமாக வெடிக்கும் திவ்யா ஸ்ரீதர் கொடுத்த புகா

First Published | Oct 9, 2022, 1:11 PM IST

சின்னத்திரை சீரியல் நடிகை திவ்யா, தன்னுடைய கணவர் தன்னை தாக்கியதாக கொடுத்த புகார் தற்போது பெரிய பிரச்சனையாக வெடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யும் வரை சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

'கேளடி கண்மணி' சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கியவர் கன்னட சீரியல் நடிகர் திவ்யா ஸ்ரீதர். இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போது, இதே சீரியலில் ஹீரோவாக நடித்த... ஆர்ணவ் என்பவருக்கும், திவ்யாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. எனவே ஒரு நிலையில் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் சுமார் 5 வருடங்கள் இருந்த நிலையில், பின்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இது குறித்து திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து, கர்ப்பமாக உள்ள தகவலையும் வெளியிட்டார். இந்த தகவல் படு வைரலாகியது. பின்னர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு, தன்னை அர்ணவ் அடித்து கொடுமை படுத்துவதாகவும், அவர் தன்னுடைய வயிற்றில் அடித்ததில் ப்ளீடிங் ஏற்பட்டு, குழந்தை கலையும் நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: Blue sattai-க்கு பின்னால் இப்படி ஒரு ஸ்டோரி இருக்கா! மாறன் எப்படி ப்ளூசட்டை மாறன் ஆனார்?- அவரே சொன்ன நச் பதில்
 

Tap to resize

இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அர்ணவ் தற்போது தன்னுடையன் சீரியலில் நடித்து வரும், நடிகையுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் அர்ணவ் இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிலையில், கணவரை விவாகரத்து செய்யாமலேயே தன்னுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாகவும் அவர் தன்னுனடய குழந்தையை கலைப்பதற்காகவே இப்படி ஒரு நாடகம் ஆடி வருவதாக தெரிவித்தார். இதற்க்கு பின்னர் ஏற்கனவே மஹாலக்ஷ்மி சர்ச்சையில் சிக்கிய ஈஸ்வர் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: காதலிக்க நேரமில்லை... விஜய் தேவரகொண்டா உடனான காதல் சர்ச்சை குறித்து மனம்திறந்த ராஷ்மிகா
 

இதற்க்கு ஆதாரமாக சில வீடியோக்களையும் அர்ணவ் வெளியிட்டிருந்தார். மேலும் திவ்யா தன்னை தாக்கியதாக கூறிய நேரம் தான் அங்கு இல்லவே இல்லை என கூறினார். இதற்கான ஆதாரங்களையும் காட்ட தயாராக இருப்பதாக கூறினார்.

இந்த பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், தற்போது திவ்யா, கர்ப்பிணியாக தன்னை அர்ணவ் தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அர்ணவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: அட்டகாசமான போட்டியாளர்களுடன் அமர்களமான ஆரம்பம்... தெறிக்கவிடும் கமல்ஹாசனின் ‘பிக்பாஸ் 6’ புரோமோ இதோ
 

Latest Videos

click me!