cinematographer Chezhiyan passed away : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக வலம் வந்த செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 57.
தமிழ் திரைப்பட உலகில் தனது தனித்துவமான ஒளிப்பதிவு பாணி மற்றும் யதார்த்தமான காட்சியமைப்புகளால் தனி அடையாளத்தை உருவாக்கிய தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இன்று காலை காலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினரையும், திரைப்பட ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயற்கை ஒளியையும், வாழ்வியலை மையமாகக் கொண்ட காட்சிகளையும் மிக நேர்த்தியாக திரையில் பதிவு செய்வதில் செழியன் தனி முத்திரை பதித்தவர். பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய அவர், பரதேசி, கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, ஜோக்கர் உள்ளிட்ட பாராட்டுப் பெற்ற திரைப்படங்களில் தனது ஒளிப்பதிவு திறமையை வெளிப்படுத்தி விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது கேமரா மொழி, கதையின் உணர்வுகளை இயல்பாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததாகப் பலரும் பாராட்டியுள்ளனர்.
24
இயக்குநராகவும் ஜொலித்த செழியன்
ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் செழியன் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தார். அவர் இயக்கிய டூலெட் திரைப்படம் தேசிய திரைப்பட விருதைப் பெற்றதுடன், உலகின் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவின் படைப்பாற்றலை உலக அரங்கில் எடுத்துச் சென்ற இயக்குநர்களில் ஒருவராகவும் அவர் மதிக்கப்பட்டார்.
34
செழியன் திரைப்பயணம்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செழியன், இன்ஜினியரிங் படித்து முடித்து ஒளிப்பதிவாளராகும் ஆசையுடன் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றினார். பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் செழியன். இதையடுத்து ஏராளமான ஹிட் படங்களில் பணியாற்றிய அவர், தி ஃபிலிம் ஸ்கூல் என்கிற திரைப்பட பயிற்சி அமைப்பை நடத்தி வந்தார்.
தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவிற்கு புதிய காட்சிமொழியை அறிமுகப்படுத்திய செழியனின் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது படைப்புகளும், திரைப்படங்களுக்காக அவர் விட்டுச் சென்ற கலைப் பாரம்பரியமும் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும். பாரதிராஜா, பாக்யராஜ் என இரண்டு பெரும் ஜாம்பவான்களின் மறைவில் இருந்து மீள முடியாமல் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செழியனின் மறைவு மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.