கங்குவாவின் 2ஆம் பாகம் குறித்து பேசிய நடிகர் நட்டி; இன்னும் யாருக்குமே புரியல!

Published : Dec 23, 2024, 11:55 AM IST

Natarajan Subramaniam Talk about Kanguva 2 Release : கங்குவாவின் 2ஆம் பாகம் திரைக்கு வந்தால் தான் அனைவருக்கும் புரிய வரும் என்று நடராஜன் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

PREV
15
கங்குவாவின் 2ஆம் பாகம் குறித்து பேசிய நடிகர் நட்டி; இன்னும் யாருக்குமே புரியல!
Natarajan Subramaniam Talk about Kanguva 2 Release

Natarajan Subramaniam Talk about Kanguva 2 Release : சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மோசமான தோல்வி கொடுத்த படங்களின் பட்டியலில் கங்குவாவும் ஒன்று. இயக்குநர் சிவா மற்றும் சூர்யா காம்பினேஷனில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் கங்குவா. வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடையே மோசமான விமர்சனம் பெற்றது. ரூ.2000 கோடி பட்ஜெட் குவிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த இந்த படம் ரூ.107 கோடி வரையில் வசூல் குவித்து தோல்வி படமாக அமைந்தது. இந்தப் படம் குறித்து விமர்சிக்காத விமர்சகர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவருமே கங்குவா படம் குறித்து விமர்சித்தனர்.

25
Suriya Kanguva Box Office Collection

கங்குவா வெளியாவதற்கு முன்னதாக அதிகமாக பேசிய சூர்யா, படம் வெளியான பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், ஜோதிகா முதல் பிரபல இயக்குநர்கள் வரையில் அனைவரும் கங்குவா படம் குறித்து பேசினர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா படம் பாதியை கூட வசூல் எடுக்கவில்லை. முதல் பாகம் தான் பிடிக்காமல் போய்விட்டது, 2ஆம் பாகம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தகவல் வெளியானது.

35
Kanguva

எனினும், படத்தில் சூர்யாவின் நடிப்பில் எந்த குறையும் இல்லை. படத்தின் கதையில் தான் குறை இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கங்குவா படத்தில் நட்டி என்ற நடிகர் நடராஜன் சுப்பிரமணியம் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். கங்குவாவின் முதல் பாகத்தை மட்டும் பார்த்துவிட்டு யாரும் விமர்சிப்பது அவ்வளவு நல்லதல்ல. 2ஆம் பாகத்தை பார்த்தால் அனைவருக்கும் பிடிக்கும். அப்போது தான் கங்குவாவின் அருமை எல்லோருக்கும் புரிய வரும் என்று கூறியிருக்கிறார். இதற்கு இவ்வளவு பட்டும் திருந்தவில்லையா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

45
Kanguva Box Office Collection

கங்குவா கொடுத்த தோல்விக்கு பிறகு நடிகர் சூர்யா இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா45 படத்தில் நடித்து வருகிறார். இதே போன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா44 படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் சூர்யாவுக்கு ஒரு டர்னிங் பாய்ண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
Kanguva

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், பிரேம் குமார், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஷ்ரேயா சரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதே போன்று சூர்யா45 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடிக்கிறார். சுவாசிகா, யோகி பாபு, நட்டி ஆகியோர் பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சாய் அபயங்கார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories