தியேட்டரில் 100 கோடி வசூல் அள்ளிய நானியின் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published | Sep 21, 2024, 3:11 PM IST

Surya’s Saturday Movie OTT release  : விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூல் அள்ளிய சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Nani

தெலுங்கு திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பவர் நானி. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன தசரா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு 6 பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன. தசரா படத்தின் வெற்றிக்கு பின்னர் நானி நடிப்பில் வெளிவந்த ஹாய் நானா படமும் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார்.

surya's saturday

கடந்த ஆண்டு நானிக்கு சக்சஸ்புல்லாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பாதியில் அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தான் அவரின் சரிபோதா சனிவாரம் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படம் தமிழில் சூர்யாஸ் சாட்டர்டே என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. சனிக்கிழமை மட்டும் சண்டை போடும் ஒரு விநோதமான கேரக்டரில் நடிகர் நானி இப்படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... யுவன் சங்கர் ராஜா பிறந்த குஷியில்... இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?


surya's saturday OTT Release

சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கி இருந்தார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். கோட் பட வரவால் இப்படம் தமிழ்நாட்டில் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் தெலுங்கு ஆடியன்ஸ் மத்தியில் சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது.

surya's saturday OTT Release Date

இந்த நிலையில் சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 26-ந் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தியேட்டரில் வரவேற்பை பெற்றது போல் ஓடிடியிலும் சூர்யாஸ் சாட்டர்டே படத்துக்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... முதல் நாளிலேயே கோட் பட வசூலை முந்தியதா லப்பர் பந்து? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Latest Videos

click me!