யுவன் சங்கர் ராஜா பிறந்த குஷியில்... இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

First Published | Sep 21, 2024, 2:37 PM IST

Ilaiyaraaja Song Secret : இசைஞானி இளையராஜா தன்னுடைய கடைசி மகனான யுவன் சங்கர் ராஜா பிறந்த சந்தோஷத்தில் தான் கம்போஸ் செய்த பாடல் பற்றி கூறி இருக்கிறார்.

yuvan shankar raja, Ilaiyaraaja

இசைஞானி இளையராஜாவுக்கும் அவரது மனைவி ஜீவாவுக்கும் மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் அவரது மூத்த மகன் பெயர் கார்த்திக் ராஜா. அவரும் சில படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். கார்த்திக் ராஜாவை தொடர்ந்து இரண்டாவதாக பவதாரிணி பிறந்தார். பவதாரிணியும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றியதோடு பல வெற்றிப்பாடல்களை பாடி இருக்கிறார். அதுமட்டுமின்றி சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார்.

Ilaiyaraaja daughter and sons

இளையராஜாவின் கடைசி வாரிசாக பிறந்தவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் தன்னுடைய தந்தையின் ஜெராக்ஸ் காப்பியாக திகழ்ந்து வருகிறார். இன்றைய தலைமுறையினருக்கு இவரின் பாடல்கள் தான் போதையாக இருக்கின்றன. இதன்காரணமாக இவரை லிட்டில் மேஸ்ட்ரோ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது இளையராஜா ஒரு பாடல் கம்போஸிங்கில் இருந்துள்ளார். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... இதல்லவா காவியக் காதல்... மனைவிக்காக வாலி இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறாரா?


Ilaiyaraaja son yuvan shankar Raja

யுவன் சங்கர் ராஜா கடந்த 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி பிறந்தார். அவர் பிறந்த போது இயக்குனர் மகேந்திரன் தன் படத்தின் கம்போஸிங்கிற்காக கோவைக்கு அழைத்து சென்றிருந்தாராம். அங்கு தன்னுடைய இசைக் கலைஞர்களுடன் பாடல் கம்போஸிங்கில் இருந்த இளையராஜாவிடம் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி வந்து உனக்கு மகன் பிறந்திருக்கிறான் என சொன்னதும் இளையராஜா மிகுந்த சந்தோஷமடைந்தாராம்.

Ilaiyaraaja Song Secret

மகன் பிறந்த சந்தோஷத்தில் ஒரு பாடலையும் கம்போஸ் செய்திருக்கிறார். அந்த பாடல் தான் ஜானி படத்தில் இடம்பெறும் ‘செனோரீட்டா ஐ லவ் யூ’ என்கிற பாட்டு. ஆனந்த துள்ளலோடு இருக்கும் அந்த பாடலை இளையராஜா மகன் பிறந்த குஷியில் கம்போஸ் செய்த அந்த பாட்டு பட்டிதொட்டியெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஜானி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒரு பாட்டுக்கு 500 ரூபா தான்... பேரம் பேசிய பாட்ஷா பட தயாரிப்பாளர் - வைரமுத்து செய்த தக் லைஃப் சம்பவம்

Latest Videos

click me!