முதல் நாளிலேயே கோட் பட வசூலை முந்தியதா லப்பர் பந்து? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

First Published Sep 21, 2024, 1:19 PM IST

Lubber Pandhu Movie Box Office : ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

GOAT vs Lubber pandhu

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வந்தது. முதல் நாளிலேயே கோட் திரைப்படம் ரூ.126 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. தற்போது 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது கோட்.

Lubber pandhu Box Office

நேற்று மட்டும் கோட் திரைப்படம் உலகளவில் ரூ.2.01 கோடி வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. நேற்றைய காலை காட்சியில் 35 லட்சமும், மேட்னி ஷோவில் 47 லட்சமும், மாலை காட்சியில் 61 லட்சமும், இரவு காட்சியில் 57 லட்சமும் கோட் திரைப்படம் வசூலித்து இருந்தது. இதன்மூலம் இதுவரை உலகளவில் ரூ. 410 கோடி வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் கோட் திரைப்படம் ரூ.200 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை படைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... புருடா விடுகிறாரா ஆர்த்தி... பாடகியுடன் இருக்கும் தொடர்பு என்ன? உண்மையை புட்டு புட்டு வைத்த ஜெயம் ரவி

Latest Videos


Lubber pandhu Day 1 Collection

கோட் படத்துக்கு போட்டியாக நேற்று ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து, ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர், சீனு ராமசாமி இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை, சதீஷின் சட்டம் என் கையில், சசிகுமார் நந்தன் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து படத்துக்கு தான் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

Lubber pandhu Box Office

அதன்படி லப்பர் பந்து திரைப்படம் நேற்று ஒரே நாளில் வெறும் ரூ.70 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளது. ஆனால் கோட் படம் நேற்று மட்டும் இப்படத்தை விட 3 மடங்கு அதிகம் வசூலித்து இருந்தது. இருப்பினும் இன்று விடுமுறை தினம் என்பதால் லப்பர் பந்து திரைப்படம் கோடிகளில் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒரு பாட்டுக்கு 500 ரூபா தான்... பேரம் பேசிய பாட்ஷா பட தயாரிப்பாளர் - வைரமுத்து செய்த தக் லைஃப் சம்பவம்

click me!