Jayam Ravi Says about singer Kenisha : ஆர்த்தி உடனான விவாகரத்து முடிவை அறிவித்த பின்னர் தன்னைப்பற்றி பரவும் சர்ச்சைகளுக்கு நடிகர் ஜெயம் ரவி விளக்கம் அளித்து இருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்த ஜோடி கடந்த 15 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்தார் ஜெயம் ரவி. பின்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி, தன்னிடம் கேட்காமலேயே ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
25
Jayam Ravi Wife Aarthi
பின்னர் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி இடையிலான விவாகரத்துக்கான காரணங்கள் இணையத்தில் உலா வந்தன. அதன்படி ஜெயம் ரவிக்கு பாடகி கெனிஷா உடன் தொடர்பு இருந்ததாகவும், இருவரும் கோவாவில் தனிக்குடித்தனம் நடத்தியபோது ஆர்த்தியிடம் ஜெயம் ரவி கையும் களவுமாக சிக்கியதை அடுத்து தான் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் உள்பட பல யூடியூபர்கள் கூறி இருந்தனர். இதனால் இந்த விவகாரம் மேலும் பூதாகரமானது.
35
Jayam Ravi Aarthi Divorce
இந்த நிலையில், தன்னை பற்றிய விவாகரத்து சர்ச்சைகளுக்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : கடினமாக உழைத்து இத்தனை ஆண்டுகளாக நான் சேர்த்த பெயரையும் புகழையும் டேமேஜ் செய்ய நினைக்கிறார்கள் அவ்வளவு எளிதில் அதை நடக்க விட மாட்டேன். நான் என்னுடைய வக்கீல் மூலம் ஆர்த்தியின் தந்தையிடம் பேசிய பின்னர் தான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு முன்னரே ஆர்த்தியின் பெற்றோரும், என்னுடைய பெற்றோரும் கலந்து ஆலோசித்தனர். அப்படி இருக்கும்போது எப்படி எதுவுமே எனக்கு தெரியாது என ஆர்த்தி சொல்கிறார் என தெரியவில்லை.
ஜூன் மாதம் என்னுடைய மகன் ஆரவ்வின் பிறந்தநாள் வந்தது. அப்போது நான் சென்னையில் தான் இருந்தேன். அவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் வெளிவந்தன. என்னுடைய காரை வேறு ஊரில் பார்த்ததாக சொல்கிறார்கள். நான் எனது காரை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்வேன். அதற்காக தான் நான் கார் வாங்கி இருக்கிறேன். அது என்னுடைய சொந்த உழைப்பில் நான் வாங்கிய கார், அதை எங்கு வேணாலும் எடுத்து செல்ல எனக்கு உரிமை இருக்கு.
விவாகரத்து பற்றி என்னுடைய மூத்த மகன் ஆரவிடம் மட்டும் கூறினேன். இளைய மகன் அயான் மிகவும் சின்ன பையன் என்பதால் அவனிடம் இதுபற்றி பேசவில்லை. ஆரவ் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் சொன்னான். அதற்காக சூழல் இல்லை என்பதை அவனிடம் எடுத்துக் கூறினேன்.
55
Jayam Ravi Slams Aarthi
பாடகியுடன் தொடர்பு படுத்தி பேசப்படுவது குறித்து விளக்கம் அளித்த ஜெயம் ரவி, அந்த பாடகியை எனக்கு தெரியும். அவர் பாடகி மட்டுமல்ல ஒரு சைகாலஜிஸ்டும் கூட, நிறைய பேரை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளார். அவருடன் சேர்ந்து ஒரு ஆன்மிக மையத்தை திறக்க திட்டமிட்டு வந்தேன். அதுபிடிக்காததால் இப்படி பேசுகிறார்களா என தெரியவில்லை. என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. நீதிமன்றத்தில் அதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். சட்டத்தின் மூலம் உண்மை வெளியே வரும்” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.