இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாக சைதன்யா, '' இயக்குநர் சந்து மொண்டேட்டி ஆறு மாதங்களுக்கு முன் கதையையும், கதை களத்தையும் விவரித்தார். அதில் நான் மிகவும் உற்சாகமானேன். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதையை உருவாக்கி இருந்தார். தயாரிப்பாளர் வாஸ் மற்றும் சந்து இரண்டு வருடங்களாக இப்படத்தின் திரை கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த கதை மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உடல் மொழி, மீனவ கிராமங்களின் அமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளவே இங்கு வருகை தந்திருக்கிறோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கி இருக்கின்றன'' என்றார்.