இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்தடுத்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தங்கலான்' படக்குழு அவரின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.