பார்ட் 2 மட்டுமில்ல.. பார்ட் 3, 4 கூட இருக்கு - ரகசியங்களை புட்டு புட்டு வைத்த டிமான்ட்டி காலனி இயக்குனர்!

Ansgar R |  
Published : Aug 04, 2023, 04:52 PM IST

பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களுடைய உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த ஒருவர்தான் அஜய் ஞானமுத்து. முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் 7ம் அறிவு மற்றும் தளபதி விஜயின் துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

PREV
13
பார்ட் 2 மட்டுமில்ல.. பார்ட் 3, 4 கூட இருக்கு - ரகசியங்களை புட்டு புட்டு வைத்த டிமான்ட்டி காலனி இயக்குனர்!

கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டிமான்ட்டி காலனி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக களம் இறங்கினார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து இவர் இயக்கத்தில் வெளியாகி சக்கபோடு போட்ட திரைப்படம் தான் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள்.

பணம் நெருக்கடி... முன்னணி நடிகரிடமிருந்து 25 கோடி கடன் வாங்கினாரா சமந்தா?

23

அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படத்தை இவர் இயக்க துவங்கினார், ஆனால் பெருந்தொற்று காரணமாக அந்த திரைப்படம் சரியான முறையில் முன்நோக்கி செல்ல முடியாமல் திணறியது. அதன் பிறகு ஓரிரு ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, கடந்த 2022ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் அஜய் இயக்கத்தில் கோப்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

33

இந்நிலையில் மீண்டும் அருள் நிதியை வைத்து டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பகுதியை தற்பொழுது உருவாக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து. இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய அவர், டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முடித்த பிறகு, அந்த படத்தின் 3 மற்றும் நான்காம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும், இது தற்பொழுது வெளியாகவுள்ள இரண்டாம் பாகத்தின் Prequel மற்றும் Sequel பகுதிகளாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர தின ஸ்பெஷல்... தேசபக்தியை உணர்த்தும் தமிழ் சினிமாவின் டாப் 5 திரைப்படங்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories