சமந்தா புரபோஸ் பண்ணிய அதே நாளில்... நாக சைதன்யாவுக்கு சோபிதா உடன் நடந்த நிச்சயதார்த்தம் - வைரலாகும் போட்டோஸ்

Published : Aug 08, 2024, 01:52 PM IST

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் அவருடைய காதலி சோபிதா துலிபாலாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

PREV
14
சமந்தா புரபோஸ் பண்ணிய அதே நாளில்... நாக சைதன்யாவுக்கு சோபிதா உடன் நடந்த நிச்சயதார்த்தம் - வைரலாகும் போட்டோஸ்
Naga Chaitanya And Sobhita Dhulipala Engagement

சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் நாக சைதன்யா, அடுத்த ஆண்டே நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் வயப்பட்டார். இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்து வந்தனர். குறிப்பாக லண்டனில் சோபிதா உடன் டேட்டிங் சென்றபோது இருவரும் ஒன்றாக எடுத்த போட்டோஸ் வெளியாகி வைரல் ஆனது. அதன்மூலம் தான் நாக சைதன்யா, சோபிதா ஜோடியில் காதல் விவகாரம் தெலுங்கு திரையுலகில் காட்டுத்தீ போல் பரவியது. 

24
Nagarjuna x post

நடிகை சோபிதா துலிபாலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். அப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சோபிதா. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற சோபிதா, அங்கு கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். விரைவில் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.

இதையும் படியுங்கள்... சமந்தாவின் அக்காவை தான் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா நாக சைதன்யா? இதென்ன புது கதையா இருக்கு!

34
Naga Chaitanya And Sobhita Dhulipala Engagement photos

இதே போல் நடிகர் நாக சைதன்யாவும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் தற்போது தண்டல் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் மீனவனாக நடித்திருக்கிறார் நாக சைதன்யா. தண்டல் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

44
Naga Chaitanya And Sobhita Dhulipala Engagement photos

நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவருக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயமானதாகவும், சோபிதாவை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ள நாகார்ஜுனா. அவர்கள் இருவருக்கும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதே ஆகஸ்ட் 8-ந் தேதி தான் நடிகர் நாக சைதன்யாவுக்கு நடிகை சமந்தா புரபோஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  3 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் தந்தை... ராஜவாழ்க்கை வாழும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு இதோ

Read more Photos on
click me!

Recommended Stories