மஜிலி, லவ் ஸ்டோரி சாதனையை முறியடிக்குமா தண்டேல்? 4 நாளில் ரூ.41.10 கோடி வசூல் கொடுத்த நாக சைதன்யா படம்!

Published : Feb 11, 2025, 09:24 AM IST

 Thandel Box Office Collection Day 4 Report in Tamil : நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் 4 நாட்களில் மொத்தமாக ரூ.41.10 கோடி மட்டுமே வசூல் குவித்திருக்கிறது.

PREV
14
மஜிலி, லவ் ஸ்டோரி சாதனையை முறியடிக்குமா தண்டேல்? 4 நாளில் ரூ.41.10 கோடி வசூல் கொடுத்த நாக சைதன்யா படம்!
மஜிலி, லவ் ஸ்டோரி சாதனையை முறியடிக்குமா தண்டேல்? 4 நாளில் ரூ.41.10 கோடி வசூல் கொடுத்த நாக சைதன்யா படம்!

 Thandel Box Office Collection Day 4 Report in Tamil : லவ் ஸ்டோரி படத்திற்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்த படம் தான் தண்டேல். இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கடந்த 7ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் தண்டேல். இந்தப் படத்தில் பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், பப்லூ பிரித்விராஜ், கல்யாண் நடராஜன், கல்ப லதா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் பாதியில் சாய் பல்லவியை உருகி உருகி காதலித்து வரும் நாக சைதன்யா 2ஆவது பாதியில் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறார்.

24
மஜிலி, லவ் ஸ்டோரி சாதனையை முறியடிக்குமா தண்டேல்? 4 நாளில் ரூ.41.10 கோடி வசூல் கொடுத்த நாக சைதன்யா படம்!

அங்கு புயலின் தாக்கம் காரணமாக தங்களை காப்பாற்றிக் கொள்ள எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து அவர்களால் கைது செய்யப்படுகிறார்கள். இதையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்தார்களா என்பது தான் படத்தோட மீதி கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. உண்மையில், இந்த படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தான் படத்தை பார்க்க வேண்டுமா? என்று தெரியும். மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் மொழியில் இந்தப் படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

34
நாக சைதன்யா, சாய் பல்லவியின் தண்டேல் 4 நாளில் ரூ.41.10 கோடி வசூல்

இருந்தபோதிலும் நாக சைதன்யாவின் வாழ்க்கையில் இந்தப் படம் திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது. தண்டேல் வெளியான முதல் நாளில் ரூ.11.5 கோடி வசூல் குவித்தது. 2ஆவது நாள் ரூ.12.1 கோடியும், 3ஆவது நாளில் ரூ.12.75 கோடியும் வசூல் குவித்திருந்தது. 4ஆவது நாளான நேற்று இந்தப்படம் ரூ.4.75 கோடி மட்டுமே வசூல் குவித்து மொத்தமாக 4 நாட்களில் தண்டேல் ரூ.41.10 கோடி வசூல் குவித்திருக்கிறது. தெலுங்கு சினிமாவில் தண்டேல் 26.94 சதவிகித வசூல் பெற்றது. திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை நாளுக்கு நாள் வேறுபடுகிறது.

44
நாக சைதன்யா, சாய் பல்லவியின் தண்டேல் 4 நாளில் ரூ.41.10 கோடி வசூல்

நேற்று காலை காட்சிக்கு 20.01 சதவிகிதமாக இருந்த நிலையில், பிற்பகல் காட்சிக்கு ரசிகர்களின் வருகையானது 26.56ஆக அதிகரித்தது. இதே போன்று மாலை காட்சிக்கும் 27.12 சதவிகிதமும், இரவு காட்சிக்கு 34.08 சதவிகிதமும் ரசிகர்களின் வருகை இருந்துள்ளது. உலகளவில் தண்டேல் முதல் நாளில் ரூ.21.27 கோடி வசூல் குவித்தது. இது நாக சைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் கொடுத்த படமாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் வெளியான தண்டேல் ஒரு வாரத்திற்கு பிறகு வசூல் ரூ.60 கோடியை தாண்டு என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோபிதா துலிபாலா உடனான திருமணத்திற்கு பிறகு வெளியான நாக சைதன்யா நடிப்பில் வெளியான முதல் படம் தண்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories