கவிஞர் நா முத்துக்குமார், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு பாடலாசிரியர். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. நா முத்துக்குமாருக்கு அண்மையில் தமிழ் சினிமா சார்பில் விழா எடுக்கப்பட்டது. ஆனந்த யாழை என்கிற அந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு நா முத்துக்குமார் பற்றி புகழ்ந்து பேசினர். இந்த விழாவில் நா முத்துக்குமாரின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். இந்த விழாவை இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், ராம் மற்றும் வசந்த பாலன் ஆகியோர் வெற்றிகரமாக நடத்தினர்.
24
நா முத்துக்குமார் பாடல் ரகசியம்
பாடலாசிரியர் நா முத்துக்குமார் தமிழ் திரையுலகில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி உள்ளார். படம் இயக்கும் ஆசையும் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த நா முத்துக்குமாரை, பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர் சீமான் தான். இதையடுத்து தமிழில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் உடன் நா முத்துக்குமார் பணியாற்றி இருந்தாலும், யுவன் கூட்டணியில் அவர் இணைந்தால் ஒரு மேஜிக் உருவாகும். இவர்கள் இருவரது காம்போவில் ஏராளமான ஹிட் பாடல்கள் வந்துள்ளன. அதில் ஒரு பாடலைப் பற்றிதான் தற்போது பார்க்க உள்ளோம். அந்தப் பாடலை கண்ணதாசனிடம் இருந்து காப்பியடித்து எழுதி இருக்கிறார் நா முத்துக்குமார்.
34
நா முத்துக்குமார் காப்பியடித்த பாடல்
நா முத்துக்குமார் கண்ணதாசனிடம் இருந்து காப்பியடித்த பாடல் வேறெதுவுமில்லை... 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெறும் கண்பேசும் வார்த்தைகள் பாடல் தான். இப்பாடலில் ‘கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை... காத்திருந்தாள் பெண் கனிவதில்லை’ என்கிற வரி இடம்பெற்று இருக்கும். இந்த வரிகளை கண்ணாதாசன் களத்தூர் கண்ணம்மா படத்திற்காக எழுதிய ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ... காத்திருப்பேன் என்று தெரியாதோ’ என்கிற வரியில் இருந்து எடுத்து தான் சற்று மாற்றி எழுதியதாக நா முத்துக்குமாரே விழா ஒன்றில் கலந்துகொண்டபோது கூறி இருக்கிறார்.
கண்ணதாசம் மட்டுமின்றி வைரமுத்துவின் பாடலிலும் தான் கைவைத்து இருப்பதாக கூறிய நா முத்துக்குமார். அதன்படி கண்டுகொண்டேன் கண்டுகொண்டே படத்திற்காக வைரமுத்து எழுதிய என்ன சொல்ல போகிறாய் பாடலில் இடம்பெறும் ‘இதயம் ஒரு கண்ணாடி... உனது பிம்பம் ஊஞ்சல் ஆடுதடி’ என்கிற வரிமீது நா முத்துக்குமாருக்கு ரொம்ப நாளாக கண் இருந்ததாம். இதயத்தை கண்ணாடியோடு ஒப்பிட்டிருக்கிறாரா என வியந்து பார்த்த நா முத்துக்குமார், அந்த வரியை சுட்டு கண்பேசும் வார்த்தைகள் பாடலில் பயன்படுத்தி இருக்கிறார். அதில் வரும், ‘ஒருமுகம் மறைய, மறுமுகம் தெரிய கண்ணாடி இதயமில்லை’ என பயன்படுத்தி இருந்தேன் என நா முத்துக்குமார் ஓப்பனாக கூறி இருந்தார். அந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சுட்டாலும் சூப்பரா சுட்ருக்கீங்க என அவரை பாராட்டி வருகின்றனர்.