விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லவ் டுடே மற்றும் டிராகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தில் மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக சீமான் நடித்துள்ளார். இப்படத்தை நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித் குமாரின் 7ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவரது இசையில் ஏற்கனவே வெளியான இப்படத்தின் தீமா தீமா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
24
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்பது ஒரு டைம் டிராவல் படமாகும். இதில் நாயகன் பிரதீப் ரங்கநாதனும், அவரது தந்தை சீமானும் ஒரே பெண்ணை காதலிப்பது தான் மையக்கருவாம். தந்தை மகன் இருவருமே டைம் டிராவல் செய்து ஒரே பெண்ணை காதலிப்பார்களாம். இப்படி ஒரு வில்லங்கமான கதையை தான் எடுத்துள்ளாராம் விக்கி. இப்படத்தின் மூலம் சீமான் நடிகராக கம்பேக் கொடுத்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுதவிர இன்ஸ்டா பிரபலங்கள் ஏராளமானோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
34
சிவகார்த்திகேயன் டிராப் பண்ணிய படம்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் முதன்முதலில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இப்படத்தில் நடிக்க கமிட்டானார் எஸ்.கே. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இதனால் சிவகார்த்திகேயனுக்கு பதில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைத்து அப்படத்தை எடுத்து வருகிறார் விக்னேஷ் சிவன். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது விக்னேஷ் சிவனின் 6-வது படமாகும்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை வருகிற செப்டம்பர் 18-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று வெளியிடப்பட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் போஸ்டரில் ரிலீஸ் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப்போனது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்படத்தை செப்டம்பர் 18ந் தேதிக்கு பதில், அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.