தெலுங்கு திரையுலகின் முன்னணி பின்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர் மது பிரியா. இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல் பாடியுள்ளார். குறிப்பாக... பிடா, டச் சேசி சுடு, நேலா டிக்கட், சாக்ஷியம் என இவர் பாடியுள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
இவர் பாடகியாக பிரபலமானதை தொடர்ந்து, தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஆனால் மிகவும் அமைதியாகவும், எளிதியில் மற்ற பிரபலங்களுடன் பேசி பழகாமல் இருந்ததால், முதல் நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் தொடர்ந்து, பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், ரசிகர்கள் எழுப்பும் கேவிகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுப்பவர். இந்நிலையில் மது ப்ரியாவுக்கு சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தேவையில்லாமல் தொந்தரவு செய்யும் நோக்கில் சிலர் மெசேஜ் செய்து வந்துள்ளனர். அது மட்டும் இன்றி, அவரது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தொல்லை குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி ஒருவருக்கு மர்ம நபர்கள் தொந்தரவு கொடுத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.