OTT-யில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய திகில் ஃபேண்டஸி படம்... மர்ம விண்கல் விழுந்த கிராமத்தின் அமானுஷ்ய கதை..!

Published : Aug 14, 2026, 09:24 AM IST

OTT Horror Thriller : ஓடிடியில் பல ஜானர்களில் படங்கள் இருந்தாலும் திகில் படங்களுக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் பலராலும் கவனிக்கப்படாத ஒரு படத்தை பற்றி இங்கே பார்க்கலாம்.

PREV
15
OTT Horror Thriller

வார இறுதி நாட்களில் வீட்டிலேயே அமர்ந்து திரைப்படங்களை ரசிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப ஒவ்வொரு வாரமும் பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக க்ரைம் த்ரில்லர், ஹாரர், ஃபேண்டஸி மற்றும் காதல் கதைகளுக்கு ஓடிடி ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில், தற்போது திகில் மற்றும் மர்மம் கலந்த கதையுடன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வரும் திரைப்படம் பற்றி தான் பார்க்க உள்ளோம்.

OTT : ரியல் சீரியல் கில்லரின் கதை... ஓடிடியில் ஒளிந்திருக்கும் தரமான தமிழ் படம் - மிஸ் பண்ணாம பாருங்க

25
மர்மமான சம்பவங்களின் பின்னணியில் ஒரு கிராமம்!

அப்படத்தின் பெயர் ‘ஷம்பாலா’. ஆதி சாய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், ஹாரர், ஃபேண்டஸி மற்றும் மிஸ்டரி அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. யுகந்தர் முனி இயக்கியுள்ள ‘ஷம்பாலா’ படத்தில் அர்ச்சனா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்வாசிகா, மதுநந்தன், ரவி வர்மா, ராமராஜு, ஹர்ஷ வர்தன், அன்னபூர்ணா, லட்சுமண் மீசாலா, இந்திரநீல் வர்மா, பிரவீன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

35
கதை என்ன?

படத்தின் கதை 1980-களின் பின்னணியில் நகர்கிறது. ‘ஷம்பாலா’ என்ற கிராமத்தில் திடீரென வானத்தில் இருந்து ஒரு விண்கல் வந்து விழுகிறது. அந்த சம்பவத்துக்குப் பிறகு, கிராமத்தில் அடுத்தடுத்து பல விசித்திரமான நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்குகின்றன. விண்கல் விழுந்ததைத் தொடர்ந்து கிராமத்தில் மர்மமான மரணங்களும் ஏற்படுகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போகிறார்கள். வானத்தில் இருந்து விழுந்த அந்தப் பொருள் தங்களது கிராமத்துக்கு ஏதோ ஆபத்தை கொண்டு வந்திருக்கலாம் என்ற அச்சமும் அவர்களிடம் உருவாகிறது.

45
உண்மையை தேடும் விஞ்ஞானி

இந்த மர்ம சம்பவங்களுக்கான காரணத்தை கண்டறிவதற்காக விஞ்ஞானியான ஆதி சாய் குமாரின் கதாபாத்திரம் ஷம்பாலா கிராமத்திற்குள் நுழைகிறது. அங்கு நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பதை அவர் ஆராயத் தொடங்குகிறார். இந்த விசாரணையில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ச்சனா ஐயர், அவருக்கு உதவுகிறார். இருவரும் இணைந்து கிராமத்தில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளின் பின்னணியை தேடிச் செல்லும்போது, பல எதிர்பாராத விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. விண்கல் உண்மையில் எங்கிருந்து வந்தது? அதற்கும் கிராமத்தில் நடைபெறும் மரணங்களுக்கும் என்ன தொடர்பு? ஷம்பாலாவைச் சுற்றி இருக்கும் மர்மத்தின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் முக்கிய ட்விஸ்ட்.

55
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

திகில் காட்சிகள், மர்மமான சம்பவங்கள் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திரையரங்கில் பார்க்கத் தவறியவர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே படத்தை ரசிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ‘ஷம்பாலா’ திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. ஹாரர் மற்றும் மிஸ்டரி கதைகளை விரும்புபவர்களுக்கு, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories