பீகார் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயத்தில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்று தனப்பெரும் கட்சியாக உள்ளது. அதே போன்று பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும், லோக் ஜன்சக்தி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது.
24
பீகாரின் இளம் MLA
குறிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாடகி மைத்திலி தாகூர் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளார். வெறும் 25 வயதேயான மைத்திலி அலிநகர் தொகுதியில் போட்டியிட்டு 84,915 வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்துள்ளார். இது அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்ஜெடி வேட்பாளரைக் காட்டிலும் சுமார் 11000 வாக்குகள் முன்னிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பீகார் மாநிலத்தின் இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
34
இணையத்தில் வைரலான மைதிலி தாகூர்
நிதிஷ்குமாருக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் கவனம் பெற்ற நிலையில் மைதிலி பல்வேறு மொழிகளில் பாடிய பாடல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் தமிழில் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணான கண்ணே பாடலை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பாடி வெளியிட்டிருந்த மைதிலியின் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பாடலின் இசையமைப்பாளர் இமான், “சில பாடல்கள் காலத்தால் அழியாத கிளாசிக் பாடல்களாக மாறுகின்றன! சமூக ஊடகங்களின் சக்தியால், இன்று பல்வேறு காரணங்களுக்காக அது மீண்டும் வைரலாகப் பரவி வருவதில் மகிழ்ச்சி! நிபந்தனையற்ற அன்புடன் அதைப் பகிர்ந்து கொண்ட கடவுளுக்கும், அனைத்து அன்பர்களுக்கும் மகிமை! என்று பகிர்ந்து தனது வாழ்த்தையும் குறிப்பிட்டுள்ளார்.