Gangai Amaran : இப்படியா பண்றது... எரிச்சலாகுது - பட விழாவில் நடிகர் விஜய்யை திட்டி பகீர் கிளப்பிய கங்கை அமரன்

சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் விஜய்யின் செயலை பார்த்து தான் வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.

Music director Gangai Amaran slams actor vijay

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) திரைப்படம் தயாராகி உள்ளது. நெல்சன் (Nelson) இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Music director Gangai Amaran slams actor vijay

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


இதையடுத்து தளபதி 66 (Thalapathy 66) படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் (Gangai Amaran) விஜய்யின் செயலை பார்த்து தான் வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “விஜய் தனது பெற்றோரை தள்ளி வைத்தது வேதனையாக இருந்தது. நாங்களெல்லாம் அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் நாடகத்திற்கு பின்னணி வாசித்தவர்கள். நான் ஓப்பனாக சொல்கிறேன், எனக்கு எதுவும் பயமில்லை. நாங்களெல்லாம் பெரியவர்கள், நாங்க விமர்சனங்களை சொல்லத்தான் செய்வோம்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் நாடகத்திற்கு நான் வாசித்த போது விஜய் குழந்தையாக இருந்தார். அப்போதெல்லாம் நாங்கள் அவரை கொஞ்சி விளையாடுவோம். விஜய்யை அவரது பெற்றோர் எப்படி வளர்த்தார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததால், அந்த செய்தியை கேட்டதும் எனக்கு அவ்வளவு எரிச்சலாக இருந்தது. ஆகையால் விஜய் ரசிகர்கள் அனைவரும் அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... என்ன பிக்பாஸ் இதெல்லாம்... ஸ்மோக்கிங் ரூமில் நெருக்கமாக இருந்த ஜோடி! பார்த்து பதறிப்போன நிரூப்- ஷாக்கிங் video

Latest Videos

click me!