அடக்கடவுளே..விடுதலைக்கு கட்டம் சரியில்ல?..தயாரிப்பாளருக்கு ரைடு விட்ட இன்கம் டேக்ஸ்..

Kanmani P   | Asianet News
Published : Mar 03, 2022, 09:49 PM IST

சூரியின் விடுதலை பட தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.. 

PREV
18
அடக்கடவுளே..விடுதலைக்கு  கட்டம் சரியில்ல?..தயாரிப்பாளருக்கு ரைடு விட்ட இன்கம் டேக்ஸ்..
viduthalai first look

விஜய், அஜித், சூர்யா, ரஜினி என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்துள்ள சூரி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். 

28
viduthalai shooting spoot

 அதன்படி பொல்லாதவன்,  ஆடுகளம், விசாரணை,  வடசென்னை, அசுரன் என மாறுபட்ட கதை களத்தை கொடுத்த  வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை நாயனாக வைத்து ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

38
viduthalai shooting spoot

 இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குனர் கவுதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். 

48
soori

அதோடு ஜெய் பீம் படத்தில் கொடூர காவலராக தோன்றி மிரட்டியிருந்த தமிழ், இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு காவலராகவும் நடித்துள்ளார். 

58
soori

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

68
soori

முன்னதாக வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இல்லாதால் படம் தள்ளிப்போனதாக சொல்லப்பட்டது.. பின்னர் மீண்டும் துவங்கிய விடுதலை எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தற்கு காரணம் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய்சேதுபதியின் கால்ஷீட் கிடைக்காததே என சொல்லப்படுகிறது...

78
soori

பின்னர் அடித்த மாத வாக்கில் சூட்டிங் துவங்கலாம் என கருதப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சோதனையாக அதன் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு சொந்தமான இடங்களில் ரைடு நடந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

88
Elred Kumar

நேற்றும், இன்றும்  RS இன்ஃபோடெயின்மென்ட் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் எல்ரெட் குமார், அவரது பங்குதாரர்களான ஜெயராம், பைனான்சியர் சுரேஷ் லால்வானி, எல்ரெட் குமார் உதவியாளர் கந்தசாமி மற்றும் ராணிப்பேட்டை தொழிலதிபர் ஏ.வி.சாரதி ஆகியோருக்கு சொந்தமான 28 இடங்களில் ஒரே நேரத்தில் 250க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் பினாமி பெயரில் வாங்கி குவித்த சொத்துக்கள், ரொக்கம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது... 

Read more Photos on
click me!

Recommended Stories