தேவாவின் உடன் பிறந்த சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது திரைப்பயணம் பற்றியும், அவரின் பாடல்கள் மற்றும் இசையை பற்றி பார்க்கலாம்.
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான சபேஷ் - முரளி இருவரும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வந்தது மட்டுமின்றி பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்த சரத்குமாரின் சமுத்திரம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்கள். அதற்கு முன்னரே ஜோடி படத்திற்கு பின்னணி இசை மட்டும் அமைத்திருந்தனர். அப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். சமுத்திரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்தனர் சபேஷ் - முரளி சகோதரர்கள்.
24
இதெல்லாம் சபேஷ் - முரளி இசையமைத்த படங்களா?
இயக்குனர் சேரனின் ஆட்டோகிராஃப் படத்திற்கு தங்களின் பின்னணி இசை மூலம் உயிர் கொடுத்தது சபேஷ் முரளி தான். அதைப்பார்த்து இம்பிரஸ் ஆன சேரன், தான் இயக்கிய அடுத்த படமான தவமாய் தவமிருந்து திரைப்படத்திற்கு அவர்களையே இசையமைக்க வைத்தார். அதில் இடம்பெற்ற ‘ஒரே ஒரு ஊருக்குள்ள’ பாடல் செம ஹிட் அடித்தது. பின்னர் சேரனின் பொக்கிஷம் படத்திற்கும் இவர்கள் தான் இசையமைத்தார்கள். அதில் ‘நிலா நீ வானம் காற்று’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.
சேரனை போல் சபேஷ் - முரளி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த மற்றொரு இயக்குனர் இராசு மதுரவன் தான். அவர் இயக்கிய மாஸ்டர் பீஸ் திரைப்படமான மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு சபேஷ் முரளி தான் இசை. அப்படம் எமோஷனலாக மக்கள் மத்தியில் கனெக்ட் ஆனதற்கு இவர்களின் உருக்கமான பின்னணி இசையும் ஒரு காரணம். அதேபோல் இராசு மதுரவனின் மற்றொரு ஹிட் படமான கோரிப்பாளையம் படத்திற்கு இவர்கள் தான் இசையமைத்திருந்தனர்.
34
தேவாவின் முதுகெலும்பாக இருந்த சபேஷ்
இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் முன்னர் வரை தன்னுடைய அண்ணன் தேவாவிற்கு பக்க பலமாக இருந்து வந்திருக்கிறார் சபேஷ். இவர்களின் உதவியோடு தான் ஒரு வருடத்தில் 38 படங்களுக்கு இசையமைத்தாராம் தேவா. அந்த அளவுக்கு அவருக்கு உதவி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சூப்பர்ஸ்டாரின் டைட்டில் கார்டுக்கு பயன்படுத்தப்படும் கிளாசிக் பிஜிஎம்-மிற்கு சபேஷ் முரளியின் பங்களிப்பும் இருக்கிறது. இப்படி தேவா உச்சத்தில் இருந்த சமயத்தில் அவருக்கு முதுகெலும்பாக இருந்தது சபேஷ் - முரளி தான்.
தமிழ் சினிமாவில் ரீ-ரெக்கார்டிங் கிங் ஆகவும் சபேஷ் - முரளி ஜொலித்திருக்கிறார்கள். ஜோடி, ஆட்டோகிராஃப், பட்டாளம், சிந்து சமவெளி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், கொடிவீரன், சேரன் இயக்கிய திருமணம், பாராதிராஜா இயக்கிய அன்னக்கொடி போன்ற படங்களுக்கு பின்னணி இசை அமைத்தது சபேஷ் - முரளி தான்.
இப்படி இசையில் தன்னுடைய சகோதரர் உடனே பயணித்த சபேஷ், தற்போது அவரை தனியே தவிக்க விட்டுச் சென்றிருக்கிறார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சபேஷ் இன்று காலமானார். அவரின் மறைவு அவரின் சகோதரர்கள் தேவா மற்றும் முரளிக்கு பேரிடியாக உள்ளது.