‘பாக்ஸ் ஆபிஸ் பாகுபலி’ பிரபாஸ் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்.. வெறும் 4 படங்களில் 4000 கோடி வசூலா?

Published : Oct 23, 2025, 12:51 PM IST

நடிகர் பிரபாஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்களும் அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தையும் பார்க்கலாம்.

PREV
110
1. பாகுபலி 2 : தி கன்க்ளூஷன் (2017)

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், நாசர் மற்றும் ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் தான் பாகுபலி 2 : தி கன்க்ளூஷன். 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.1788.06 கோடி ஆகும். இது பிரபாஸின் ஆல்டைம் ஹிட் படமாகும்.

210
2. கல்கி 2898 AD (2024)

நாக் அஸ்வின் இயக்கிய பிரம்மாண்ட படைப்பு தான் கல்கி 2898 AD. பிரபாஸ், தீபிகா படுகோன் உடன் அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் என மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் நடித்த இப்படம் 2024-ல் ரிலீஸ் ஆனது. இப்படம் உலகளவில் ரூ.1042.25 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

310
3. பாகுபலி : தி பிகினிங் (2015)

பிரபாஸின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பாகுபலி : தி பிகினிங். 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் பிரபாஸ் உடன் தமன்னா, ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் உலகளவில் 650 கோடி வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.

410
4. சலார் பகுதி 1 : சீஸ்ஃபயர் (2023)

பிரபாஸ், பிருத்விராஜ், சுருதி ஹாசன், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ஜெகபதி பாபு கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் சலார். இப்படத்தை கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 617.75 கோடி வசூலித்து டீசண்ட் ஆன வெற்றியை பதிவு செய்தது.

510
5. சாஹோ (2019)

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் மற்றும் ஜாக்கி ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் சாஹோ. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 451 கோடி வசூலித்திருந்தது. இருப்பினும் இது ஒரு பிளாப் படமாக அமைந்தது.

610
6. ஆதிபுருஷ் (2023)

பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான், சன்னி சிங் மற்றும் தேவதத்தா நாகே நடிப்பில் 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி இருந்தார். இப்படம் 393 கோடி வசூலித்தும் படுதோல்வியை சந்தித்தது. ஏனெனில் அதன் பட்ஜெட் அதைவிட அதிகமாகும்.

710
7. ராதே ஷ்யாம் (2022)

கே. கே. ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம் தான் ராதே ஷ்யாம். இப்படத்தில் பிரபாஸ் உடன் பூஜா ஹெக்டே, சத்யராஜ், கிருஷ்ணம் ராஜு மற்றும் பாக்யஸ்ரீ நடித்திருந்தனர். 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.149.5 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் டிசாஸ்டராக மாறியது.

810
8. மிர்ச்சி (2013)

கொரட்டலா சிவா இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ரிச்சா, சத்யராஜ் மற்றும் பிரம்மானந்தம் நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் மிர்ச்சி. இப்படம் ரூ.83.4 கோடி வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

910
9. மிஸ்டர் பெர்ஃபெக்ட் (2011)

தசரத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் 2011-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் மிஸ்டர் பெர்ஃபெக்ட். இதில் பிரபாஸ் உடன் காஜல் அகர்வால், டாப்ஸி, முரளி மோகன், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர். இப்படம் ரூ.48.2 கோடி வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது.

1010
10. ரெபல் (2012)

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த படம் ரெபெல். இப்படத்தில் பிரபாஸ் உடன் தமன்னா, தீக்ஷா சேத், கிருஷ்ணம் ராஜு, முகேஷ் ரிஷி மற்றும் பிரம்மானந்தம் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் ரூ.46.8 கோடி வசூலித்து பிளாப் ஆனது.

Read more Photos on
click me!

Recommended Stories