இசையமைப்பாளர் தேவாவின் தம்பி... பிரபல மியூசிக் டைரக்டர் சபேஷ் காலமானார்

Published : Oct 23, 2025, 01:17 PM IST

இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக்குறைவால் காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

PREV
Music Director Sabesh Passes Away

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்தவர்கள் தான் சபேஷ் - முரளி சகோதரர்கள். இவர்கள் இசையில் மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், கோரிப்பாளையம், மிருகம், ஆட்டோகிராஃப், பட்டாளம் என பல சூப்பர் ஹிட் படங்கள் வந்துள்ளன. விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு பின்னர் தமிழ் திரையுலகில் கோலோச்சியவர்கள் என்றால் அது சபேஷ் - முரளி தான். இவர்கள் இசையமைத்த பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

இந்நிலையில், இசையமைப்பாளர் சபேஷ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான சபேஷ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 68. சபேஷின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories