Mumtaj Emotional Request After Her Death in Tamil : நடிகை மும்தாஜ், தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா சினிமாவில் முன்னணி நடிகை. பல படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார், பல படங்களில் சீரியஸான குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கிளாமர் நடனம் ஆடியுள்ளார். சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். இவர் பேட்டி ஒன்றில், நான் செத்ததுக்குப் பின்னர் தனது கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரவேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார் அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
26
மோனிஷா என் மோனாலிசா
தமிழ் சினிமா: டி.ராஜேந்தர் இயக்கிய 1999 ம் ஆண்டு மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். அந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய்யுடன் குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு ஆடி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால் தான் காதலா, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, ஏழுமலை, லண்டன், வீராசாமி, ராஜாதி ராஜா உள்ளிட்ட உட்பட்ட பல படங்களில் மும்தாஜ் நடித்துள்ளார்.
36
பிக் பாஸ் சீசன் 2:
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் கலந்து கொண்டார். மேலும், அப்போது அவர் சக போட்டியாளர்களிடம் பேசிய உண்மைகளையும் ஆன்மிகத்தை பற்றியும் பேசினார். மும்தாஜ் பற்றி பேசியது தமிழக ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது., நான் சிறு வயதில் கிளாமராக நடித்தேன் அப்பொழுது எதைப்பற்றியும் கவலைப்படவில்லை .ஆனால் இப்போது நான் நடித்த படங்கள், நடனமாடிய பாடல்களை எனது உடன் பிறந்தவர்களின் குழந்தைகளோடு அமர்ந்து வீட்டில் பார்க்க முடியவில்லை. எனக்கு அவ்வளவு சங்கோச்சமாக உள்ளது எனத் தெரிவித்தார். கிளாமராக நடித்ததை பற்றி மிகவும் கவலைப்படுகிறேன் சிறிய சிறிய உடைகளை அணிந்ததற்கு மிகவும் தலை குனிகிறேன் என்றும் கூறியுள்ளார்.
46
சினிமாவை கைவிட்டதற்கான காரணம்:
நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் தான் பிறந்தேன். எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். அல்லாஹ் எனக்கு சில விஷயங்கள் செய்ய வேண்டும் செய்யக்கூடாது என கட்டளையிட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களின் அர்த்தம் தெரியாமலேயே இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது எனக்குள் மெல்ல மெல்ல மாற்றம் நிகழத் தொடங்கியது. அதன் காரணமாக சினிமாவில் இதை செய்ய மாட்டேன் அந்த கதை வேண்டாம் என சொல்ல தொடங்கினேன். நான் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ் தான் காரணம்.
56
ஆன்மீகத்திற்கு மனம் மாறிய மும்தாஜ்:
மும்தாஜ் முழுமையாக ஆன்மீகத்தில் இறங்கினார். உடை உணவு பழக்கவழக்கங்கள் செயல்முறைகள் என்று அனைத்திலும் முழுமையாக மாறிவிட்டார். ஆவின் குர்ஆன்களை மட்டும் படித்து அதை செய்முறைகளை பின்பற்றி வருகிறார்.இதுவரை மூன்று முறை மக்காவிற்குச் சென்றுள்ளார். மக்கா என்பது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆன்மீகப் பயணம் செய்து சென்றடையும் இடம். இங்கு செல்லும் இஸ்லாமியர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற நம்பிக்கை இஸ்லாமிய மக்களிடடையே உள்ளது. அவர் அதிகமாக அல்லாஹ்வை நம்பியும் அவருக்காகவே வாழ்க்கை அர்ப்பணித்ததாகவும் கூறியுள்ளார்.
66
நான் செத்ததுக்கு அப்புறம் பதிவு போடாதீங்க:
நான் அனைவரிடமும் என்று கேட்டுக்கொள்கிறேன் நான் இறந்த பிறகு எனது கவர்ச்சியான, கிளாமரான புகைப்படங்களைப் பகிரவேண்டாம்.நான் சினிமால சம்பாதிச்சிட்டு இருந்த விதம் நான் போட்டிருந்த டிரஸ் என்னோட மதத்துல அனுமதி கிடையாது. என்னோட மதத்துல என்ன பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்கோ அதுக்கு எதிரா தான் நான் எல்லாமே பண்ணிட்டு இருந்தேன். நம்ம பண்ற தப்புக்கு கண்டிப்பா கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். நான் பண்றது தப்புன்னு தெரிஞ்சி கொஞ்சம் கொஞ்சமா என்ன நான் மாத்திக்கிட்டேன். என்னோட கோரிக்கையை என்னன்னா நான் செத்ததுக்கு அப்புறம் என்னோட பழைய போட்டோ போட்டு பதிவு போடாதீங்க. எனது கடைசி ஆசையாக இதனை எடுத்துக்கொள்ளுங்கள். ரசிகர்களிடம் மிகவும் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.