இசையமைப்பாளர்: இசையின் மீது அளப்பெரிய காதல் கொண்டிருந்த விஜய் ஆண்டனி, கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாக சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் ஜீவா மற்றும் சந்தியா நடிந்த டிஸ்யூம் படத்தில் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்.. என்ற பாடல் தான் திரைத்திறையில் இவரைப் பிரபலமாக்கியது. தொடர்ந்து காதலில் விழுந்தேன், உத்தமபுத்திரன், எமன், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களில் இசையமைத்து உச்சத்திற்கு சென்றார் விஜய் ஆண்டனி.. இசைத்துறையில் கொடிக்கட்ட பறந்த இவர் நடிப்பதிலும் ஆர்வம் காட்டினார்.
கதாநாயகன்: கடந்த 2012 ஆம் ஆண்டு வித்தியாசமானக் கதைக்களத்துடன் வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் இயக்குனர் சசியின் பிச்சைக்காரன் படம் புதிய அவதாரத்தை அவருக்கு கொடுத்தது. தன்னுடைய உடல் பாவனைகளுக்கு ஏற்ற கதாபாத்திரத்தைத் தேர்வு செய்த இவர் சலீம். இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைக்காரன் போன்ற படங்களில் நடித்தார்.இந்த படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்தார் விஜய் ஆண்டனி.