இந்திய சினிமாவில் இசை முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படி இந்திய சினிமாவில் கோலோச்சிய ஒரு இசையமைப்பாளர், பாடல் பாடுவதிலும் வல்லவராக திகழ்ந்து வருவதால் அவருக்கு ஒரு பாடல் பாட ரூ.3 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பாடகரும் இவர் தான். இவரின் இசைக்கு அடிமையாகாத ஆளே இருக்க முடியாது. சொல்லப்போனால் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான முகேஷ் அம்பானியே இந்த தமிழ் சினிமா பிரபலத்தின் ரசிகர் தான். அவர் வேறுயாருமில்லை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான்.
25
AR Rahman
ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை ஆர்.கே.சேகரும் தமிழ் மற்றும் மலையாள படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப் குமார். இவருக்கு 9 வயதான போதே அவரின் தந்தை சேகர் உயிரிழந்துவிட்டார். தந்தையின் மறைவுக்கு பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய அவர் தன் பெயரை அல்லாஹ் ரக்காஹ் ரகுமான் என மாற்றிக் கொண்டார். ரகுமான் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டனர்.
35
Isaipuyal AR Rahman
இளையராஜாவிடம் சில ஆண்டுகள் பணியாற்றி வந்த ரகுமானுக்கு கடந்த 1991-ம் ஆண்டு பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை திறம்பட பயன்படுத்திக் கொண்ட ரகுமான், முதல் படத்திலேயே தனது இசைத் திறமையால் வியக்க வைத்தார். அதற்கு பரிசாக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அன்று தொடங்கிய இவரது இசை ராஜாங்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
தற்போது வரை 7 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் ரகுமான். இந்திய சினிமா வரலாற்றில் அதிக தேசிய விருதுகள் வாங்கிய இசையமைப்பாளர் ரகுமான் தான். அதுமட்டுமின்றி இந்தியர்களுக்கு நீண்ட நாட்களாக எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கர் விருதையும் முதன்முதலில் வென்றது ரகுமான் தான். ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக அவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இதுதவிர இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதையும் இருமுறை வென்றிருக்கிறார்.
55
AR Rahman Net Worth
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ரகுமான். குறிப்பாக பாலிவுட்டில் ஏராளமான மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக இந்தியாவின் செல்வாக்குமிக்க தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் ரகுமானின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதன் வெளிப்பாடாக அண்மையில் தங்கள் மகனின் திருமண விழாவிலும் ரகுமானின் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் அம்பானி. தற்போது 58 வயதாகும் ஏ.ஆர்.ரகுமான் ரூ.2100 கோடி சொத்துக்கு அதிபதியாகவும் திகழ்ந்து வருகிறார்.