Reason Behind Ajith Kumar Vidaamuyarchi is not Release on Pongal Festival
Reason Behind Ajith Kumar Vidaamuyarchi is not Release on Pongal Festival : இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 6ஆவது படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித் குமார், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ், ரம்யா சுப்பிரமணியன், நிகில் நாயர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று பொங்கல் ரேஸிலிருந்து ஜகா வாங்கியது. இதற்கு என்ன காரணம் என்று இயக்குநர் தரப்பிலிருந்தோ அல்லது தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திடமிருந்தோ எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், சில காரணம் என்று லைகா நிறுவனம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக அறிவித்தது.
Ajith Kumar, Vidaamuyarchi Release Postponed
எனினும், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வணங்கான், மெட்ராஸ்காரன், கேம் சேஞ்சர் ஆகிய படங்களும், 12ஆம் தேதி விஷாலின் மதகஜராஜா படமும், 14ஆம் தேதி நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களும் திரைக்கு வர இருக்கின்றன. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Vidaamuyarchi, Lyca Productions
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய கூடாது என்று தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் லைகா நிறுவனம் கூறியுள்ளது. அதோடு இந்தியன் 3 படத்தை இயக்குநர் ஷங்கர் முடித்து கொடுத்தால் மட்டுமே கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
Vidaamuyarchi Movie
இதன் காரணமாக இப்போது லைகா நிறுவனம் தயாரித்த விடாமுயற்சிக்கு தெலுங்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கில் உருவான கேம் சேஞ்சருக்கு தமிழில் லைகா தடை போட்ட நிலையில் தமிழில் உருவான விடாமுயற்சி படத்துக்கு தெலுங்கில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இதன் காரணமாக கூட பொங்கல் ரிலீஸிலிருந்து விடாமுயற்சி படம் தள்ளி போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
Vidaamuyarchi, Trisha, Arjun, Vidaamuyarchi Cast, Arav, Ajith Kumar
தனது காணாமல் போன மனைவியை தேடி பாலைவன பகுதிக்கு செல்லும் ஹீரோவை இரக்கமற்ற குண்டர்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஆபத்தான ஒன்றை கண்டுபிடிக்க பயன்படுத்துவதும், அவர் அதனை கண்டுபிடித்தாரா அல்லது தனது மனைவியை தேடினாரா என்பது தான் படத்தோட மீது கதை. இதில் அஜித்தின் மனைவியாக த்ரிஷா நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அர்ஜூன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.