Arnav
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ரீ-எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். அவர்கள் வெளியில் நடந்த சில விஷயங்களை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சொல்லியும் வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை முதல் ஆளாக சுனிதாவும், வர்ஷினியும் ஜோடியாக எண்ட்ரி கொடுத்தனர். அவர்கள் இருவரும் போட்டியாளர்களுக்கு தேவையான அட்வைஸை வழங்கி வந்தனர். பின்னர் ஃபேட்மேன் ரவீந்தர் சந்திரசேகர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்.
Bigg Boss Tamil season 8
ரவீந்தர் உள்ளே வந்ததும், அனைத்து போட்டியாளர்கள் பற்றியும் நல்லவிதமாக பேசினார். இதன்பின்னர் அர்னவ்வும், தர்ஷா குப்தாவும் எண்ட்ரி கொடுத்தனர். இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு நபர் என்றால் அது அர்னவ் தான். ஏனெனில் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்திலேயே எலிமினேட் ஆன அர்னவ், வெளியே செல்லும் வரை நல்லவன் போல் நடித்துவிட்டு, மேடையில் விஜய் சேதுபதி முன் நின்று அகம் டிவி வாயிலாக ஹவுஸ்மேட்ஸிடம் பேசும் போது தன்னுடைய சுயரூபத்தை காட்டினார்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸில் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரி; யாரெல்லாம் உள்ள வர்றாங்க தெரியுமா?
Arnav enter Bigg Boss House
அப்போது போட்டியாளர்களை வாடா, போடா என ஒருமையில் பேசியது மட்டுமின்றி, ஜால்ராஸ் என்று தரக்குறைவாக அழைத்தார். இதனால் டென்ஷனான விஜய் சேதுபதி, அர்னவ்வை தடுத்து நிறுத்தி அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மேடையிலேயே வார்னிங் கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனால் தங்களை தரக்குறைவாக பேசிய அர்னவ்வை உள்ளே வந்தால் வச்சு செய்ய வேண்டும் என்கிற முடிவில் போட்டியாளர்கள் அனைவரும் இருந்தனர்.
Bigg Boss Contestants Slams Arnav
இந்த நிலையில், உள்ளே தர்ஷா குப்தா உடன் எண்ட்ரி கொடுத்ததும் அனைவரையும் பார்த்து துப்பாக்கியால் சுடுவது போல் பில்டப் பண்ணிய அர்னவ்வை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதன்பின் லிவ்விங் ஏரியாவில் அனைவரையும் அமர வைத்து அவர்களைப் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவிக்க முயன்ற அர்னவ்வை, எதிர்த்து அனைத்து போட்டியாளர்களும் கேள்வி எழுப்ப அதற்கு பதிலளிக்காமல் மழுப்பிய அர்னவ்விடம் நீங்க பேசுறதெல்லாம் இங்க கேட்க முடியாது, இந்த இடத்துக்குனு ஒரு மரியாதை இருக்கிறது அதை நீ இழந்துட்ட என்று சொல்லி அங்கிருந்து தீபக் கிளம்பி சென்றார். பின்னர் மற்ற போட்டியாளர்களும் அர்னவ்வை ரவுண்டு கட்டியதால் என்ன செய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடி போனார் அர்னவ். இதனால் இன்றைய எபிசோடில் செம சம்பவம் வெயிட்டிங் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் இவ்ளோ கல்நெஞ்சக்காரரா? கெஞ்சு கேட்டும் நிறைவேறாமல் போன மஞ்சரியின் ஆசை!