Published : Jan 07, 2025, 12:32 PM ISTUpdated : Jan 07, 2025, 01:29 PM IST
பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 'நந்தா' திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் குறித்து, இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில், தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் பாலா. நடிகர் விக்ரமை வைத்து 1999 ஆம் ஆண்டு, 'சேது' படத்தை இயக்கிய பாலா, இதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் 'நந்தா'. சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், லைலா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், சரவணன், ராஜஸ்ரீ, கருணாஸ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
26
Suriya and Bala Movie
சிறுவயதிலேயே தன்னுடைய தாயை கொடுமைப்படுத்தும் தந்தையை கொலை செய்து விட்டு நந்தா (சூர்யா) சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்ல நேர்கிறது. பின்னர் தண்டனை கால முடிந்து, சிறையில் இருந்து வெளியே வரும் நந்தா தனது தாயையும் - தங்கையையும் பார்ப்பதற்காக வீட்டிற்கு செல்கிறார். ஆனால் தன்னுடைய மகன் ஒரு கொலைகாரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத தாய், அதை தாங்கிக்கொள்ள முடியாமல், தன்னுடைய மகனிடம் பேசாமல் தவிர்க்கிறார்.
தன்னுடைய படிப்பை தொடர நினைக்கும் நந்தாவுக்கு, அந்த ஊரில் பெரிய மனிதராக இருக்கும் ராஜ்கிரண் படிக்க வைக்க முன் வருகிறார். அகதியாக வரும் லைலா மீது சூர்யாவுக்கு காதல் மலர்கிறது. பின்னர் நந்தா வழி மாற காரணம் என்ன? அவர் ஏன் அடிதடியில் இறங்குகிறார்? ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் இந்த படத்தை இயக்குனர் பாலா விறுவிறுப்பாக இயக்கி இருந்தார்.
46
Director Bala Upcoming movie Vanangaan
நடிகர் சூர்யாவுக்கு திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்புமுனையை இந்த படம் தான் ஏற்படுத்தி கொடுத்தது என்பதை அவரே... சமீபத்தில் பாலாவின் 'வணங்கான்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது கூறினார். அதே போல் காக்க காக்க, கஜினி போன்ற திரைப்பட வாய்ப்புகள் இந்த படத்தை பார்த்து விட்டு தான் இயக்குனர்கள் தனக்கு தந்ததாகவும் சூர்யா கூறிய நிலையில், பாலாவுக்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்தார்.
சூர்யா திரையுலக வாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமாக மாறிய இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சூர்யா இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் தல அஜித் தான். அவரை வைத்து பட பூஜைகள் போடப்பட்டு, அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து போஸ்டர்களும் செய்தித்தாள்களில் வெளியான. பின்னர் இப்படத்தில் இருந்து அஜித் விலகும் சூழலுக்கு தள்ளப்பட்டார். இந்த படத்தில் இருந்து அவர் விலகியவுடன் தான் 'நந்தா' பட வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்துள்ளது.
66
Director Bala and Ajith Planned Movie
இந்த படத்திற்கு பின்னர் அஜித்தை வைத்து 'நான் கடவுள்' திரைப்படத்தை திட்டமிட்டார் பாலா. அப்போது அஜித்துக்கும் - பாலாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு இந்த படத்தில் இருந்தும் அஜித் விலக காரணமாக அமைந்தது. இதன் பின்னரே, ஆர்யாவை வைத்து இந்த படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.