திரையுலகை நீண்டகாலமாக பாதித்து வரும் மிகப்பெரிய பிரச்சனை பைரசி. படம் வெளியான மறுநாளே, பைரசி பதிப்பு இணையதளங்களில் வெளியாவதால், புதுப்படங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஏராளமான பைரசி தளங்கள். தமிழ்நாட்டில் தமிழ்ராக்கர்ஸ் என்கிற பைரசி தளம் இயங்கி வந்ததை போல் ஆந்திராவில் ஐபொம்மா என்கிற பைரசி தளம், டோலிவுட்டுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது.
சாமானியர்களையும் குறிவைத்து கொண்டுவரப்பட்ட எளிதான செயலிதான் ஐபொம்மா. இது மிகக் குறைந்த நேரத்தில் பெரும் பிரபலமடைந்தது. வெளிநாட்டில் இருந்துகொண்டு, போலீசாருக்கும் சட்டத்திற்கும் சிக்காமல், புதுப்படங்களை பைரசி செய்து, தரமான பதிப்பை இலவசமாக ஐபொம்மா செயலியில் பதிவேற்றி வந்தனர். இவர்களைப் பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.