சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா அப்செட்டாக இருப்பதற்கான காரணத்தை தான் கண்டுபிடித்துவிட்டதாக முத்து சொல்ல, அதைக்கேட்ட ரோகிணி ஷாக் ஆகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் உண்மை முகத்தை பற்றி தெரிந்துகொண்ட மீனா, அவரைப்பற்றிய ரகசியங்களை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் திணறுகிறார். தன்னைப் பற்றிய விஷயங்களை லீக் செய்தால், தான் தற்கொலை செய்துகொள்வேன் என ரோகிணி மிரட்டியதால் உண்மையை வெளியே சொல்லாமல், தனக்குள்ளேயே மூடி மறைக்கிறார் மீனா. அவரிடம் ரோகிணி தன்னுடைய பிளாஷ்பேக் கதை முழுவதையும் சொன்னதால், அவருக்காக பரிதாபப்படும் மீனா, முத்துவிடம் கூட உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
மீனா மீது வந்த டவுட்
மீனா வீட்டில் இருந்து பூ கொடுக்க சென்ற இடத்தில் மாற்றி மாற்றி பேச, அவரது தோழிகள் அவரைப் பார்த்து உனக்கு என்ன ஆச்சு என கேட்கிறார்கள். அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார் மீனா. இதையடுத்து அங்கு வரும் முத்துவிடம், மீனாவை பற்றி அவரது தோழிகள் கூறுகிறார்கள். மீனா ஊருக்கு போய்விட்டு வந்ததில் இருந்து ஒருமாதிரி இருக்கிறார் என சொல்கிறார்கள். அதைக்கேட்ட முத்து, எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது என சொல்வதோடு, சரி நான் அது என்ன என்பதை கண்டுபிடிக்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
34
முத்து எடுத்த முடிவு
இதையடுத்து செல்வத்திடம் மீனாவை பற்றி ஃபீல் பண்ணி பேசும் முத்து, ஊருக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் இப்படி இருக்குறா என சொல்ல, அதற்கு செல்வம், கண்டிப்பா அங்கதான் எதாவது நடந்திருக்கும் என சொல்கிறார். உடனே முத்து, ஊரில் ஒரு சாமியார் மீனாவை பார்த்து ஊரைவிட்டு போயிடுனு சொன்னதாக சொல்ல, ஒருவேளை அதை நினைத்து மீனா அப்செட்டாக இருக்கலாம், அதனால் எனக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார். அவரிடம் மந்திரித்த கயிறு ஒன்றை வாங்கித் தருகிறேன். அதை கட்டினால் சரியாகிவிடும் என சொல்கிறார் செல்வம். முத்துவும் ஓகே சொல்கிறார்.
பின்னர் வீட்டுக்கு செல்லும் முத்து, மீனாவிடம் நீ ஏன் இப்படி இருக்க, உன்னைப் பற்றி எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு என சொல்கிறார். அதைக்கேட்டு மீனா ஷாக் ஆகிறார். தன்னைப்பற்றிய உண்மையை தான் முத்து கண்டுபிடித்துவிட்டாரோ என்று ரோகிணியும் அதிர்ச்சி அடைகிறார். அதன்பின்னர் தான் அந்த சாமியார் சொன்னதை நினைத்து தானே நீ அதிர்ச்சியா இருக்க என முத்து கேட்க, ரோகிணியும் நிம்மதி அடைகிறார். இதையடுத்து என்ன ஆனது? மீனாவின் மனக்குழப்பத்துக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.