மாஸ் நடிகர்கள், ஓராண்டுக்கு ஒரு ஹிட் படம் கொடுப்பதே அபூர்வமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு மாத இடைவெளியில் இரண்டு பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த ஒரு மாஸ் நடிகரை பற்றி பார்க்கலாம்.
90-களுக்கு முன்பு வரை நடிகர்கள் ஒரே ஆண்டில் ஏராளமான படங்களை போட்டிபோட்டு ரிலீஸ் செய்து வந்தார். ஒரு ஹீரோ ஆண்டுக்கு குறைந்தது 10 படங்களையாவது ரிலீஸ் செய்துவிடுவார். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் ஒரு படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்தாலே அபூர்வமான விஷயமாக உள்ளது. அப்படி இருக்கையில், 2025-ம் ஆண்டு முன்னணி மாஸ் நடிகர் ஒருவர் ஒரு மாத இடைவெளியில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்து, அந்த இரண்டு படங்களுமே அதிரி புதிரியான வெற்றியை ருசித்து பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலையும் அள்ளி உள்ளன.
24
மோகன்லால் கொடுத்த டபுள் பிளாக்பஸ்டர்
அந்த நடிகர் வேறுயாருமில்லை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு எம்புரான் மற்றும் துடரும் என இரண்டும் படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி உள்ளன. இதில் எம்புரான் படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி இருந்தார். அதேபோல் துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களும் ஒரு மாத இடைவெளியில் ரிலீஸ் ஆகி இருந்தன.
34
500 கோடி வசூல் அள்ளிய மோகன்லால்
எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 28ந் தேதி ரம்ஜான் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்தது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாகும். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.325 கோடி வசூலித்து, அதிகம் வசூல் செய்த மலையாள படம் என்கிற சாதனையை படைத்தது. அடுத்ததாக அவர் நடித்த துடரும் திரைப்படம் ஏப்ரல் 25ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் மலையாளத்தில் மட்டும் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. இருப்பினும் உலகளவில் 210 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படம் கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலித்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாள படம் இதுவாகும்.
ஒரே மாதத்தில் இரண்டு பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த மோகன்லால் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளன. தற்போது சத்யன் அத்திக்காடு இயக்கத்தில் ஹிருதயபூர்வம் என்கிற மலையாள படத்தில் நடித்து வரும் மோகன்லால், தமிழிலும் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.