Barroz : காஷ்மோரா கார்த்தி கெட்-அப்பில் மோகன்லால் - பரோஸ் படத்தின் போஸ்டர்கள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி

Published : May 27, 2022, 02:58 PM IST

Barroz : அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னதாகவே பரோஸ் படத்தின் போஸ்டர்கள் லீக் ஆனதால் படக்குழு கடும் அப்செட்டில் உள்ளதாம். 

PREV
14
Barroz : காஷ்மோரா கார்த்தி கெட்-அப்பில் மோகன்லால் - பரோஸ் படத்தின் போஸ்டர்கள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 12த் மேன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. அவர் நடித்த த்ரிஷ்யம் படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் 12த் மேன் படத்தையும் இயக்கி இருந்தார். கடந்த வாரம் ஓடிடி-யில் வெளியான இப்படம் த்ரிஷ்யம் படங்களை போல் விறுவிறுப்பாக இருந்ததாக பாராட்டுக்களை பெற்றது.

24

இதையடுத்து மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் பரோஸ். இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் மோகன்லால். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தை த்ரிஷ்யம் பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளைக் கவரும் விதமாக இப்படத்தை உருவாக்கி உள்ளார் மோகன்லால்.

34

மலையாள எழுத்தாளர் ஜிஜோ புன்னூஸ் என்பவர், தன்னுடைய நாவலை தழுவி இப்படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. அதில் காஷ்மோரா படத்தில் கார்த்தி தோன்றும் மொட்டை தலை கெட் அப்பில் மோகன்லால் காட்சியளிக்கிறார்.

44

அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னதாகவே பரோஸ் படத்தின் போஸ்டர்கள் லீக் ஆனதால் படக்குழு கடும் அப்செட்டில் உள்ளதாம். இதன்காரணமாக விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்...  Aryan khan : போதிய ஆதாரம் இல்லையாம்... போதைப்பொருள் வழக்கில் இருந்து ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விடுவிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories