சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் மோகன்லாலின் வாரிசு; ஹீரோயின் ஆனார் விஸ்மயா!

Published : Jul 02, 2025, 03:00 PM IST

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் ஒரே மகளான விஸ்மயா, தற்போது ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

PREV
14
Vismaya Mohanlal Debut as Heroine

மோகன்லாலின் மகள் நாயகியாக அறிமுகமாகிறார். ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் படத்தின் மூலம் விஸ்மயா மலையாள திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார். இது ஆசிர்வாத் சினிமாஸின் 37வது படமாகும். சினிமா வெளிச்சத்தில் இருந்து எப்போதும் விலகியே இருந்த விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டு உள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் பேவரைட்டாக இருந்து வந்தது.

24
ஹீரோயினாக அறிமுகமாகும் மோகன்லால் மகள்

'கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021 இல் வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் 'பெஸ்ட் செல்லர்' பிரிவிலும் இந்தப் புத்தகம் இடம்பிடித்தது. தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. மொய் தாய் என்ற தாய் தற்காப்புக் கலையைப் பயின்றிருக்கிறார். இதன் பயிற்சி வீடியோக்களை விஸ்மயா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இப்படி இத்தனை நாட்களாக சினிமாவுக்காக ஆயத்தமாகி வந்த விஸ்மயா தற்போது ஒருவழியாக கதாநாயகி ஆகி உள்ளார்.

34
மோகன்லால் மகனின் எளிமை

விஸ்மயாவின் அறிமுகப் படம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை. விஸ்மயாவின் சகோதரர் பிரணவ் மோகன்லாலின் அறிமுகப் படம் 'ஆதி' என்ற அதிரடிப் படமாகும். ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் 2018 இல் வெளியானது. ஒரு சூப்பர்ஸ்டாரின் மகன் என்கிற பந்தா இல்லாமல் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புபவர் பிரணவ். அண்மையில் கூட இவர் வெளிநாட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

44
பாக்ஸ் ஆபிஸ் கிங் மோகன்லால்

மறுபுறம் நடிகர் மோகன்லால் தற்போது மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருகிறார். மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தன. லூசிஃபரின் தொடர்ச்சியாக, பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலின் 'எம்புரான்' திரைப்படம் மலையாள திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது. இதையடுத்து தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'துடரும்' திரைப்படம் கேரளாவில் மட்டும் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை படைத்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories