'மாடர்ன் லவ் சென்னை' தொடரில் ஷோபாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த... நடிகை ஸ்ரீ கௌரி பிரியா போட்டோஸ்!

First Published | May 20, 2023, 8:25 PM IST

நடிகை ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
 

’தி மிஸ் ஹைதராபாத் 2018’ வென்ற இளம் நடிகையான ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஒரிஜினல் தொடரான ​’​மாடர்ன் லவ் சென்னை'யில் 'ஷோபா'வாக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பேசு பொருளாக மாறியுள்ளார்.  

இயக்குனர் ராஜு முருகன், எழுதி, இயக்கப்பட்ட முதல் அத்தியாயம் ‘லால்குண்டா பொம்மைகள்’. இதில் மென்மையான இதயம் கொண்ட டாம்போயிஷ் பெண்ணாக அவர் நடித்துள்ளார். இவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. 

கடத்தப்பட்டாரா நடிகை சுனேனா? இரண்டு நாள் தீவிரமாக தேடிய போலீஸ்! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

Tap to resize

சென்னைப் பெண்ணின் பாத்திரத்தில் ஸ்ரீ கௌரி பிரியாவின் சரியான தோற்றம், தன்னிச்சையான மற்றும் இயல்பான நடிப்பு போன்றவை பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கண்கள் வழியே வெளிப்படுத்தும் நடிப்பு, சாமர்த்தியம் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் என அவரது நடிப்புத் திறமையை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

‘ரைட்டர் பத்மபூஷன்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த விமர்சனங்களைப் பெற்ற இவர், இப்போது தென்னிந்தியாவில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

படம் டல் அடித்தாலும்... முதல் நாள் வசூலில் தாறுமாறு செய்த 'பிச்சைக்காரன் 2'!படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

தற்போது, நடிகை ஸ்ரீ கௌரி பிரியா பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களால் விரைவில் வெளியிடப்படும். என கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!