வாடகை தாய் மூலம் விக்கி - நயன் ஜோடி குழந்தை பெற்ற விவகாரம்... விசாரணைக் குழு அமைப்பு - மா.சுப்ரமணியன் தகவல்

First Published | Oct 13, 2022, 11:14 AM IST

வாடகைத் தாய் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. வாடகைத் தாய் மூலம் இந்த குழந்தையை அவர்கள் பெற்றெடுத்தனர். அது எப்படி திருமணமான நான்கே மாதத்தில் குழந்தை பெற்றெடுக்க முடியும் என ஏராளமானோர் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் தடை உள்ள போதிலும் அதை மீறி அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாது நயன் - விக்கி ஜோடி, ஜாலியாக தங்களது குழந்தையுடன் நேரத்தை கழித்து வருகின்றனர். மறுபுறம் இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனில் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டு..நெக்ஸ்ட் ரஜினியை வைத்து மாஸ் படம் எடுக்க தயாராகும் மணிரத்னம்?

Tap to resize

இந்நிலையில், இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், வாடகைத் தாய் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதேபோல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், தேவைப்பட்டால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக வாடகைத் தாய் மூலம் நயன் - விக்கி ஜோடி குழந்தை பெற்ற விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... பூவையாரை தொடர்ந்து சொந்தமாக கார் வாங்கிய மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்... காரின் விலை இத்தனை லட்சமா?

Latest Videos

click me!