பொன்னியின் செல்வனில் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டு..நெக்ஸ்ட் ரஜினியை வைத்து மாஸ் படம் எடுக்க தயாராகும் மணிரத்னம்?

First Published | Oct 13, 2022, 10:18 AM IST

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரிலீசான பின் ரஜினி படம் குறித்த அறிவிப்பை வெளியிட மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் நடிக்க விரும்பிய திரைப்படம் பொன்னியின் செல்வன். ஆனால் இறுதியில் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு தற்போதுள்ள இளம் நடிகர்களான கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரை வைத்து அப்படத்தை எடுத்து முடித்துவிட்டார் மணிரத்னம்.

ponniyin selvan

பொன்னியின் செல்வனில் கமல் பின்னணி குரல் கொடுத்து ஒரு சிறிய பங்காற்றி இருக்கிறார். ஆனால் ரஜினி, இப்படத்தில் இடம்பெறும் பெரிய பழுவேட்டரையார் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புவதாக கேட்டும், மணிரத்னம் அவருக்கு நோ சொல்லிவிட்டார். ரஜினிக்கு இருக்கும் மாஸ் அந்தஸ்துக்கு அத்தகைய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவரது ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை என இதற்கு மணிரத்னம் விளக்கம் அளித்தார்.

இதையும் படியுங்கள்... பூவையாரை தொடர்ந்து சொந்தமாக கார் வாங்கிய மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்... காரின் விலை இத்தனை லட்சமா?

Tap to resize

பொன்னியின் செல்வனில் மிஸ் ஆன இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் ரஜினிக்கு ஒரு மாஸான கதை ஒன்றை சொல்லி உள்ளதாகவும், அது சூப்பர்ஸ்டாருக்கும் பிடித்துப் போனதால் அவரும் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணையும் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் கடந்த 1991-ம் ஆண்டு தளபதி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து இவர்கள் இருவரும் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு தற்போது தான் விடை கிடைத்துள்ளது. 31 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியும், மணிரத்னமும் மீண்டும் இணைந்துள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரிலீசான பின் ரஜினி படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளாராம் மணிரத்னம்.

இதையும் படியுங்கள்... தனலட்சுமி சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை... கலங்கி அழுத ஜிபி முத்து - தலைவரே கலங்காதீங்கனு ஆறுதல் கூறும் ஆர்மியினர்

Latest Videos

click me!