Meena Remember Soundarya Death: மீனா, சௌந்தர்யா மறைவு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அன்று நடந்த விபத்தில் இருந்து எப்படித் தப்பித்தேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சினிமா உலகில் சௌந்தர்யாவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 2004ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். வெறும் 32 வயதிலேயே அவரது மறைவு சினிமா துறையை உலுக்கியது. இன்றும் சினிமா பிரபலங்கள் சௌந்தர்யாவை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
மூத்த நடிகை மீனா, சௌந்தர்யாவிற்கு முன்பே சினிமாவில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பின்னர் சௌந்தர்யாவுடன் போட்டி போட்டு நடித்தார். ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயம்முறா நிகழ்ச்சியில் மீனா கலந்து கொண்டார். தனது திரைப்பயணம், குடும்பம் குறித்து மீனா பகிர்ந்து கொண்டார்.
சௌந்தர்யாவின் புகைப்படத்தைப் பார்த்து மீனா உருக்கம்
ஜெகபதி பாபு ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, இதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்டார். அந்தப் புகைப்படத்தில் போலீஸ் உடையில் சௌந்தர்யாவுடன் மீனா இருந்தார். அதைப் பார்த்ததும் மீனா உருக்கமாகப் பேசினார். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. சௌந்தர்யா அற்புதமான நபர், எனக்கு நல்ல தோழி.
45
அன்று நானும் சென்றிருக்க வேண்டும்
அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்று பிரச்சாரத்திற்கு சௌந்தர்யாவுடன் நானும் சென்றிருக்க வேண்டும். என்னையும் அழைத்தார்கள். ஆனால் எனக்கு அரசியல், பிரச்சாரம் பிடிக்காது. அதனால் படப்பிடிப்பு இருப்பதாகச் சொல்லி நான் மறுத்துவிட்டேன்.
55
சௌந்தர்யாவுடன் நடித்த படம்
சௌந்தர்யா, மீனா, ஜெகபதி பாபு இணைந்து நடித்த 'சிலக்கபச்சா கபுரம்' படம் குறித்தும் மீனா பேசினார். தனது கணவர் மறைவு, மறுமணம் குறித்த வதந்திகள் பற்றியும் அவர் விளக்கமளித்தார்.