அதே டீம்... ஆனா இயக்குனர் மட்டும் வேற! மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் குறித்து வெளிவந்த அறிவிப்பு

First Published | Jan 4, 2024, 1:02 PM IST

ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார், அப்படத்தின் 2-ம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Mayandi kudumbathar

தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராசு மதுரவன். இவர் இயக்கத்தில் வெளியான படங்களில் மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இப்படம் கடந்த 2009-ம் ஆண்டு திரைக்கு வந்தது. திருமணத்துக்கு அண்ணன் தம்பி உறவில் ஏற்படும் சலசலப்பை மையமாக வைத்து இப்படத்தை அழகாக எடுத்திருந்தார் இயக்குனர் ராசு மதுரவன்.

Mayandi kudumbathar movie team

இப்படத்தில் மற்றுமொரு கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் அண்ணன் தம்பிகளாக நடித்த தருண் கோபி, கேபி ஜெகன், சீமான், பொன்வண்ணன் ஆகிய நான்குபேருமே இயக்குனர்கள் தான். அதுமட்டுமின்றி வில்லன்களாக நடித்த ரவி மரியா, நந்தா பெரியசாமி மற்றும் காமெடியனாக நடித்த சிங்கம்புலி, மணிவண்ணனின் மருமகன்களாக நடித்த இளவரசு, ராஜ்கபூர் என இப்படத்தில் நடித்த பெரும்பாலானோர் இயக்குனர்கள் தான்.

இதையும் படியுங்கள்... கேப்டன் மில்லர் பட விழாவில் பாலியல் சீண்டல்... தனுஷ் ரசிகரை ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த நடிகை- வீடியோ இதோ

Tap to resize

Mayandi kudumbathar 2

மாயாண்டி குடும்பத்தார் இன்று காலம் கடந்து கொண்டாடப்படுவதற்கு காரணம் அதன் எமோஷனல் கனெக்ட் தான். அந்த அளவுக்கு அப்படத்தில் நடித்த அனைவருமே எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தனர். அதோடு இப்படத்தில் மணிவண்ணன் பேசும் ‘டேய் பரமா படிடா’ என்கிற டயலாக் இன்றைய டிரெண்டிங் மீம் டெம்பிளேட்டுகளுள் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிலையில், மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

KP Jagan

அதன்படி மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை கேபி ஜெகன் இயக்க உள்ளார் இவர் விஜய்யின் புதியகீதை படத்தை இயக்கியவர் ஆவார். இவர் மாயாண்டி குடும்பத்தார் முதல் பாகத்தில் மணிவண்ணனின் 3-வது மகனாக நடித்திருந்தார். இப்படத்தை இயக்கிய ராசு மதுரவன் மரணமடைந்துவிட்டதால் கேபி ஜெகன் அதன் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். மேலும் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுவார்கள் என அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... கேப்டன் மில்லர் விமர்சனம் முதல் ஹேட்டர்ஸுக்கு பதிலடி வரை.... Pre Release-ல் தனுஷ் பேசிய ஹைலைட்டான விஷயங்கள்

Latest Videos

click me!