கேப்டன் மில்லர் விமர்சனம் முதல் ஹேட்டர்ஸுக்கு பதிலடி வரை.... Pre Release-ல் தனுஷ் பேசிய ஹைலைட்டான விஷயங்கள்

First Published | Jan 4, 2024, 10:18 AM IST

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொணட நடிகர் தனுஷ் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற ஜனவரி 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து கெத்தாக வந்து கலந்துகொண்ட தனுஷ், முதல் வேலையாக மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு மெளன அஞ்சலி செலுத்திவிட்டு தான் நிகழ்ச்சியை தொடங்கினார்.

ரசிகர்கள் பற்றி தனுஷ்

இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய தனுஷ், சிறுதுளி பெருவெள்ளம்னு சொல்வாங்க. நான் 2002-ல இருந்து சேர்ந்த சிறு துளியெல்லாம் இன்னைக்கு பெருவெள்ளமா வந்திருக்கு. இதுதான் நான் சேர்த்த சொத்து என தன் மீது அன்பு செலுத்தும் ரசிகர்களை சுட்டிக்காட்டி பேசினார். தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தை பற்றி பேசிய அவர், இந்த படத்தை பற்றி நினைச்சாலே முதலில் நினைவுக்கு வருவது உழைப்பு தான். ஒரு அசுரத்தனமான உழைப்பு இந்த படத்துல இருக்கு என கூறினார்.

Latest Videos


கேப்டன் மில்லர் விமர்சனம்

இயக்குனர் அருண் மாதேஸ்வரனை பாக்குறப்போ எனக்கு வெற்றிமாறனை ஞாபகப்படுத்துகிறார். அருணை நான் முதன்முதலில் சந்திக்கும் போது இந்த தம்பியா அப்டினு தான் கதை கேட்டேன். ஒரு 15 நிமிஷம் தான் சொன்னாரு. கேட்டதும் படம் பெரிய பட்ஜெட்ல இருக்கே பண்ணிற முடியுமானு கேட்டேன். அப்படியே பண்ணிறலாம்னு சொன்னாரு. இப்போ நான் படம் பார்த்துட்டேன். படம் அப்படி தான் இருக்கு. இது சம்பவம் பண்ற கைனு தெரிஞ்சது. கேப்டன் மில்லர் சம்பவம் பண்ணும் என உறுதிபட கூறியுள்ளார் தனுஷ்.

இதையும் படியுங்கள்... 'கேப்டன் மில்லர்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் போட்டோஸ்!

ஹேட்டர்ஸுக்கு பதிலடி

மரியாதைதான் சுதந்திரம் என்கிற டேக்லைன் தான் கேப்டன் மில்லர் படத்துக்கு வைத்துள்ளார் அருண். ஆனா இங்க யாருக்கு மரியாதை இருக்கு, எதற்காக மரியாதை இருக்கு, சுதந்திரம் யாருக்கு இருக்கு என்றே தெரியவில்லை. எத செஞ்சாலும் யோசிச்சு தான் செய்ய வேண்டியதா இருக்கு. அப்படி யோசிச்சு செஞ்சு அது நல்லதாவே இருந்தாலும் அதை குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கு. குறை சொல்லிக்கிட்டு கைகாட்டிக் கொண்டே இருப்பது தான் சுதந்திரமா? என்னைப்பொருத்தவரை அது சுதந்திரம் கிடையாது சுதந்திர துஷ்பிரயோகம் என பேசினார் தனுஷ்.

வட சென்னை 2 அப்டேட்

வட சென்னை 2 படம் கண்டிப்பாக உருவாகும். அதற்கு சரியான காலம் அமையும் போது அப்படம் உருவாகும். அதற்காக நிறைய பேர் ஆவலோடு காத்திருக்கும்போது நாங்க எப்படி அதை மிஸ் பண்ணுவோம். அது நடக்கும்போது அதைப்பற்றி அதிகம் பேசலாம் என கூறி ரசிகர்களை குஷிப்படுத்தினார் தனுஷ்.

ஷிவராஜ்குமார் பற்றி தனுஷ்

ஒரு மனுஷனா ஷிவராஜ்குமார் சாரின் அன்புக்கு, பணிவுக்கும், பாசத்துக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். அவர் மேடையில் பேசும்போது நான் பார்த்து ரசிச்சுகிட்டு இருந்தேன். அவர் சிரிக்கும்போது அவர் முகத்தில் அவரது தந்தையும் தெரிகிறார், தம்பியும் தெரிகிறார். தந்தை பெயரை காப்பாற்ற உங்களை போல் யாராலும் முடியாது. என் மகன்களும் உங்களை பார்த்து கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன் என தனுஷ் பேசினார்.

இதையும் படியுங்கள்... ராசாவே உன்ன காணாத நெஞ்சு... கேப்டன் மறைவுக்கு பாட்டுப் பாடி அஞ்சலி செலுத்திய கேப்டன் மில்லர் தனுஷ்

click me!