ஒரே நாளில் அடித்து தூக்கிய “மாஸ்டர்”... “க்விட் பண்ணுடா” பாட்டுக்கு முதல் நாளே இத்தனை மில்லியன் வியூஸ்களா?

First Published Oct 17, 2020, 11:17 AM IST

அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக “ மாஸ்டர்” படக்குழு வெளியிட்ட “க்விட் பண்ணுடா” பாடல் ஒரே நாளில் மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளி சாதனை படைத்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி காம்பினேஷனில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா பிரச்சனையால் படம் இன்னும் வெளியாகவிட்டாலும், அவ்வப்போது அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது.
undefined
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அனிருத்திற்காக ‘மாஸ்டர்’ டீம் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை அறிவித்திருந்தனர்.
undefined
அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தில் வரும் க்விட் பண்ணுடா பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
undefined
அனிருத் குரலில் அவர் இசையமைத்துள்ள என் ஜீவனே, என் போதையே, நீ போதும் என்று தோன்று நேரம் தான் என துவங்கும் லிரிக்கல் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களை கவர ஆரம்பித்தது.
undefined
குடியை கைவிடுவது பற்றி இயக்குநர் விக்னேஷ் சிவனின் மார்டன் ட்ரெண்டுக்கு ஏற்ற அசத்தலான வரிகளுடன் உருவாக்கப்பட்ட அந்த பாடலில் விஜய் செம்ம ஸ்டைலாக இருப்பதாக ட்விட்டரில் கமெண்ட்கள் பறந்தன. மேலும் #QuitPannuda #Thalapathyvijay ஆகிய ஹேஷ்டேக்குகளும் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
undefined
தற்போது யூ-டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள க்விட் பண்ணுடா பாடலை ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.இது அனிருத் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் கிப்டாக அமைந்துள்ளது.
undefined
click me!