தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு இணையில்லாத நடிகையாக வலம் வந்த நடிகை சாவித்திரி ரசிகர்கள் கொண்டாடும் பேரழகியாக திரைப்படங்களில் வலம் வந்தார்.
தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உட்பட அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து வெற்றி கண்டவர். சிவாஜிக்கு போட்டியாக நடிகர் திலகம் என பட்டம் வாங்கும் அளவிற்கு நடிப்பில் உச்சம் தொட்டவர்.
சாவித்ரியின் நடிப்பிற்கு சிறந்த உதாரணம் என்றால் அது ‘பாசமலர்’ படத்தை சொல்லலாம். அந்த படத்தில் சிவாஜி கணேசனுடன் போட்டி போட்டு நடித்திருப்பார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்ரிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அதில் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பார்க்க அச்சு அசலாக சாவித்ரி போலவே உள்ளார். மகன் பெயர் சதீஷ் குமார் ஆகும்.
அழகில் அப்படியே அம்மா சாவித்ரியை உறித்து வைத்திருக்கும் விஜய சாமுண்டீஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.