30 வருட நட்பு முறிந்ததா? பொன்னியின் செல்வனில் வைரமுத்துவுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்? - மவுனம் கலைத்த மணிரத்னம்

First Published | Sep 21, 2022, 8:27 AM IST

Maniratnam : பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவை பாடலாசிரியராக பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் மனம் திறந்து பேசியுள்ளார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல்வேறு நடிகர்களும், இயக்குனர்களும் முயற்சித்தனர். இறுதியாக மணிரத்னம் அதனை வெற்றிகரமாக படமாக்கி உள்ளார். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி, பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், ஒருபக்கம் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் கலந்துகொண்ட மணிரத்னம் பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலும் அளித்தார். அதிலும் முக்கியமாக பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவை பாடலாசிரியராக பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... சியானின் அடிபொலி சம்பவம்... செண்டமேளம் அடித்து கேரளாவில் கெத்து காட்டிய விக்ரமின் மாஸ் வீடியோ இதோ

Tap to resize

இதற்கு பதிலளித்த மணிரத்னம், “ரோஜா படத்திலிருந்து வைரமுத்து, என்னுடமும் ஏ.ஆர்.ரகுமானுடனும் பயணித்தார். எங்கள் கூட்டணியில் பல்வேறு ஹிட் பாடல்களும் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழில் வைரமுத்துவை போல் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். அவரை விட திறமையானவர்களும் இருக்கிறார்கள். புதிய கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்கிற முடிவால் இப்படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என அவர் கூறினார்.

உண்மையில் வைரமுத்து, மீடூ சர்ச்சையில் சிக்கியதன் காரணமாக அவர், இப்படத்தில் பணியாற்றினால், பட ரிலீசின் போது ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்பதால் தான் அவருக்கு இப்படத்தில் வாய்ப்பளிக்கவில்லை என படம் தொடங்கப்பட்டதில் இருந்தே பேச்சு அடிபடுகிறது. ஆனால் தற்போது மணிரத்னம் அளித்த இந்த மழுப்பலான பதிலை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... கருணாஸ் நடித்துள்ள 'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை வெளியிட்ட சீமான்..!

Latest Videos

click me!