வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?

Published : Mar 26, 2026, 12:02 PM IST

வைரமுத்து எழுதிய காவியப் பாடலை மணிரத்னம் இயக்கிய கமர்ஷியல் படத்தில் வைத்ததால் அது மக்களுக்கு பிடிக்காமல் அப்படம் பிளாப் ஆனதாம். அந்த பாடல் பற்றி இங்கே பார்க்கலாம்.

PREV
14
Thiruda Thiruda flop reason

திருடா திருடா திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து எழுதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாகுல் ஹமீது அவர்கள் பாடிய 'ராசாத்தி! என்னுசுரு என்னதில்ல!' எனும் பாடல் ஒரு தனித்துவமான பாடல் ஆகும். எந்தவொரு இசைக்கருவியையும் பயன்படுத்தாமல், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் முறையை 'அகபெல்லா (Acapella)' என்பர். அவ்வாறாக இந்திய திரையுலகில் முதன்முதலாக பாடப்பட்ட அகபெல்லா பாடல் இதுவே ஆகும். இந்த பாடலை கேட்டவர்களால் கவிஞர், இசையமைப்பாளர் மற்றும் பாடகரை பாராட்டாமல் இருக்கமுடியாது. திரைப்படம் வெற்றிபெறாவிட்டாலும், இந்த பாடல் பெருமளவில் ரசிக்கப்பட்டது.

24
பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம்

பாடல்கள் மூலம் வெற்றியடைந்த திரைப்படங்கள் பல உண்டு. ஆனால் ஒரு பாடலால் தோல்வியடைந்த திரைப்படம் என்றால், அது 'திருடா திருடா' தான். அந்த பெருமைமிக்க பாடல் 'ராசாத்தி, என்னுசுரு என்னதில்ல…' இப்படியொரு சிறந்த பாடலை, இந்த திரைப்படத்தில் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறாரே! என்று கூறி மக்கள் படம் பார்க்க வரவில்லையாம். அந்தப் பாடலால் தான் படமே தோல்வி அடைந்ததாக இயக்குநர் மணிரத்னம் ஒரு பேட்டியில் ஓப்பனாக பேசி இருக்கிறார். அப்பாடல் அந்த படத்துக்கு ஃபிட் ஆகவில்லை என மணிரத்னம் கருதினாராம். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் வைரமுத்து தான் வற்புறுத்தி படத்தில் வைத்தார்களாம்.

34
வைரமுத்து தான் காரணமா?

அந்த பேட்டியில் வைரமுத்து மற்றும் ஏ.ஆர்.ரகுமானும் இடம்பெற்று இருந்தனர். அப்போது பேசிய மணிரத்னம் இந்த படம் ஓடாததுக்கு வைரமுத்துதான் காரணம் என்று நகைச் சுவையாக சொன்னார். வைரமுத்து ராசாத்தி பாடலை காவியமாக எழுதிவிட்டதால் மக்கள் மனதில் இதை ஒர் காவியப்படம் என்று நினைத்துவிட்டார்கள். நான் பொழுதுபோக்கிற்கு படம் எடுத்தேன், நீங்கள் அதில் காவியத்தன்மை வாய்ந்த பாடலை எழுதி மக்களின் மனதில் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டீர்கள், படம் பார்க்கவந்தவர்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தை தந்துவிட்டது என கூறினார்.

44
மாஸ்டர் பீஸ் பாடல்

பாடலின் வீரியம் படத்தில் இல்லை என்று ஏமாந்துவிட்டார்கள், அதனால் திருடா திருடா தோல்விக்கு, வைரமுத்து தான் காரணம் என்று நகைச்சுவையாக கூறி இருந்தார் மணிரத்னம். அப்படம் தோல்வி அடைந்தாலும் அதில் இடம்பெற்ற ராசாத்தி பாடல், 30 ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து உள்ளது. இந்த பாடலுக்கு மிகப்பெரிய பலம் என்றால் அது சாகுல் ஹமீதின் வாய்ஸ் தான். அந்த குரல் அப்பாடலை மெருகேற்றி, அதனை மனதை வருடும் பாடலாக மாற்றியது. ஏ.ஆர்.ரகுமானின் கெரியரில் ராசாத்தி பாடல் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories